Tamil Novels Episode 8 உயிரில் கலந்தவளே பாகம் 8 ( இறுதி பாகம் )
Tamil Novels Episode 8 உயிரில் கலந்தவளே பாகம் 8 ( இறுதி பாகம் ) பதிவில் சந்தோஷ் சித்ரா காதல் ஒன்று சேர்ந்ததா? சந்தோஷின் தாயின் ஆசைப்படி சித்ராவின் குடும்பத்துடன் சந்தோஷ் இணைந்தானா? என்பதை பற்றி எழுதியுள்ளேன்
Tamil Novels Episode 8 உயிரில் கலந்தவளே பாகம் 8 ( இறுதி பாகம் )
உன் அம்மாவின் இறப்புக்கு காரணம் நான்தான் என்று மீனாட்சி சொன்னதை கேட்ட சந்தோஷுக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது, கடைசி இரண்டு நாட்களாக பல அதிர்ச்சிகளை அவன் தாங்க வேண்டியது இருந்ததால் மீனாட்சி சொன்னதை கேட்டவுடன் அவனால் தாங்கிக் கொள்ள முடிந்தது.
” நேற்று மாலை 3 மணி அளவில் உன் அம்மா என்னை பார்க்க வந்திருந்தார், ‘ என் மகன் சந்தோஷும் உங்கள் மருமகள் சித்ராவும் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள், நம் குடும்பத்தில் நடந்த பிரச்சனைகள் எல்லாம் மறந்து நமது உறவை மீண்டும் தொடர்வோம், நம் பிள்ளைகளை ஒன்றாக சேர்த்து வைப்போம்’ என்று கேட்டார்.”
” அதற்கு நான் உன் அம்மாவிடம் ‘ ஏய்! நீ யாரிடம் வந்து பேசுகிறாய் என்று தெரிகிறதா? நான் மீனாட்சி, உன்னால் என் வாழ்க்கையை இழந்துவிட்டு நான் இருக்கிறேன், எனக்கும் ஒரு அன்பான கணவன், எனக்கென்று ஒரு மகனோ, மகளோ! எல்லோரையும் போல் எனக்கும் ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கை கிடைக்கும் என்று ஆசைப்பட்டு இருந்தேன், ஆனால் அதை கெடுத்தது நீ! உன் மகனுக்கு என் மருமகளை திருமணம் செய்து கொடுப்பேன் என்று நினைக்கிறாயா? என்று கேட்டேன் “
” அதற்கு உன் அம்மா ‘ என்மேல் தவறுதான், என்னை மன்னித்து விடுங்கள்! நான் வெளியில் இருந்து வந்தவள் ஆனால் சந்தோஷ் உங்கள் குடும்பத்தில் ஒருவன்தானே, அவனுக்கு உங்கள் மருமகளை திருமணம் செய்து வைத்தாள் பிரிந்த குடும்பம் இணையும், அவனுக்கு உறவு என்று இருப்பது உங்கள் குடும்பம் மட்டும்தானே, தயவுசெய்து ஒத்துக் கொள்ளுங்கள் ‘ என்று என்னிடம் மன்றாடி கேட்டார்.” ( Tamil Novels Episode 8 உயிரில் கலந்தவளே பாகம் 8 ( இறுதி பாகம் ) )
” ஆனால் நான் உன் அம்மாவின் விருப்பத்தை சற்றும் மதிக்கவில்லை, அவர் என்னிடம் கெஞ்சுவது என் மனதிற்கு திருப்தியாக இருந்தது, என் வாழ்வை என்னிடமிருந்து பறித்தவள் இன்று அவளின் மகனின் வாழ்க்கையை வேண்டி என்னிடம் கெஞ்சுகிறாள், என்று நான் சந்தோசப்பட்டேன்.”
” அதன் பிறகு அவர் எவ்வளவோ என்னிடம் மன்றாடி பார்த்தார், ஆனால் நான் சம்மதிக்கவில்லை ‘ நான் உயிரோடு இருக்கும்வரை உன் மகனுக்கும் என் மருமகளுக்கும் திருமணம் நடைபெற விடமாட்டேன், நீயும் உனது மகனும் கடைசிவரையில் தனிமரமாகதான் இருப்பீர்கள் ‘ என்று நான் உன் அம்மாவிடம் சொன்னேன் “.
” அவர்கள் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தும் என்னுடைய சம்மதம் கிடைக்காததால் மிகுந்த மன வருத்தத்துடன் அங்கிருந்து சென்றார், அந்த மன வருத்தம்தான் அவரை கார் ஓட்டும் பொழுது தடுமாற செய்திருக்க வேண்டும், என்னுடைய இரக்கமற்ற அந்தப் பேச்சுதான் உன் அம்மாவின் விபத்திற்கு காரணம், நான் செய்த தவறினால்தான் அவர் இன்று உயிரோடு இல்லை ” என்று சொன்ன மீனாட்சியின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது.
” என் அம்மாவின் மரணத்திற்கு நீங்கள்தான் முழுமையான காரணம் என்று சொல்ல முடியாது, அவருடைய வாழ்க்கை முடிந்துவிட்டது, போய்விட்டார், அதற்கு உங்களை குற்றம் சொல்லி என்ன பிரயோஜனம்? அதனால் நீங்கள் உங்கள் மனதைப் போட்டு குழப்பிக் கொள்ளாதீர்கள் ” என்றும் மீனாட்சிக்கு ஆறுதலாக சந்தோஷ் பேசினான்.
” உன் அப்பா உங்க அம்மாவை திருமணம் செய்யும் பொழுது எனக்கு 20 வயது, உன் அம்மா என் வாழ்வை அழித்து விட்டதாக நான் மிகவும் கோபப்பட்டேன், அதன் பிறகு நான் திருமணமே செய்து கொள்ளவில்லை அதற்கு முழு காரணமும் உன் அம்மாதான் என்று நினைத்தேன், என் வாழ்வை நானே அழித்துக் கொண்டதற்கு உன் அம்மாவைக் குறை சொல்வது எப்படி நியாயமாகும்? ஆனால் நீ இவ்வளவு பெருந்தன்மையாக உன் அம்மாவின் மரணத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்கிறாய், உன்னைப்போல் நானும் அப்பொழுது பெருந்தன்மையாக நடந்து கொண்டிருந்தால் நம் குடும்பம் பிரிந்து இருக்காது, என்னை மன்னித்துவிடு தம்பி ” என்று மீனாட்சி சந்தோஷிடம் வருத்தப்பட்டாள்.
ஒரு வருடத்திற்கு பிறகு :
கொடைக்கானலில் உள்ள பிரபலமான திருமண மண்டபத்தில் ” முகூர்த்தத்திற்கு நேரமாகிவிட்டது பெண்ணை அழைத்து வாருங்கள் ” என்ற ஐயரின் குரல் கேட்க மணமேடையில் சித்ரா சந்தோஷின் பக்கத்தில் அமர்கிறாள்.
ஐயரின் மந்திரம் முழங்க, சந்தோஷ் சித்ராவிற்கு மூன்று முடிச்சு போட்டான், ஆம், சந்தோஷ் சித்ராவின் திருமணம் சிறப்பாக நடந்து முடிந்துவிட்டது.
” ஒரு வருடத்திற்கு முன்பு சந்தோஷிடம் வருத்தப்பட்டு சென்ற மீனாட்சி ” கிருஷ்ணன், சுசிலாவுடன் கலந்து பேசி ” சந்தோஷை தங்களுடன் ஒன்றாக இருக்க சொன்னாள்.” முதலில் மறுத்தவன் பின்பு மீனாட்சி மற்றும் கிருஷ்ணன் தம்பதிகளின் வற்புறுத்தலின் காரணமாகவும், பிரிந்த குடும்பம் ஒன்றாக சேர வேண்டும் என்ற தாயின் ஆசைக்காகவும் ஒத்துக்கொண்டான்.
ஒரு மாதம் கழித்து சந்தோஷும் சித்ராவும் ஏரியில் படகில் செல்கின்றனர் ” உனக்கு என்னைப் பார்த்தால் அவ்வளவு இளிச்சவாயனாக தெரிந்திருக்கிறது அப்படித்தானே ” என்று சந்தோஷ் அவளிடம் கேட்டான்.
திடீரென சந்தோஷ் அப்படி கேட்டதும் சித்ராவுக்கு ஒன்றும் புரியவில்லை ” நான் எப்பொழுதும் உங்களை அப்படி நினைத்தேன்? ஏன் இப்படி பேசுகிறீர்கள் ” என்று அவள் வருத்தப்பட்டாள்.
” ஆமாம், நீ என்னை இளிச்சவாயனா நினைத்திருக்க போய்தானே நம்முடைய முதல் சந்திப்பு பேருந்தில் உன்னை மீனாட்சி எஸ்டேட்டின் சூப்பர்வைசர் என்று சொல்லி ஏமாற்றினாய் ” என்று சந்தோஷ் கேட்டான்.
” அப்படி இல்லைங்க, உங்களை முதன்முதலில் பேருந்தில் பார்த்த பொழுதே உங்கள் மீது எனக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு விட்டது ஆனால் நீங்கள் யாரென்று சொன்னபோது, நீங்கள் என்னிடம் பேசாமல் சென்று விடுவீர்களோ என்ற பயம் எனக்குள் வந்துவிட்டது அதனால்தான் நான் மீனாட்சி எஸ்டேட்டின் சூப்பர்வைசர் என்று உங்களிடம் பொய் சொன்னேன் “
” ஓ! என்னை முதன் முதலில் பார்க்கும் பொழுதே உனக்கு என் மேல் ஈர்ப்பு வந்துவிட்டதா! சரி, என் மேல் உள்ள காதலை நீ எப்பொழுது உணர்ந்தாய்? என்று சந்தோஷ் கேள்வி கேட்டான்.
” அன்று குடித்து விட்டு எனது காரின் மீது விழுந்தீர்கள் அல்லவா அப்பொழுது நீங்கள் உங்களுக்கு இடம் கிடைக்காமல் போய்விட்டது என்று கவலைப்பட்டு பேசினீர்கள் அல்லவா, அப்பொழுது உங்களை அணைத்து ஆறுதல் சொல்ல வேண்டும் என்று எனக்கு தோன்றியது, அப்போதுதான் உங்கள் மீது எனக்கு காதலும் ஏற்பட்டது ” என்ற பதில் சித்ராவிடம் இருந்து வந்தது.
” ஒ! என் மேல் உள்ள காதலால் தான் அன்று எனக்கு முத்தம் விட்டாயா? என்று அவன் கேட்டான்.
” ஆமாம் ” என்று சொன்னவள் ” சரி உங்களுக்கு எப்பொழுது என்மீது காதல் வந்தது? என்று பதில் கேள்வி கேட்டாள். ( Tamil Novels Episode 8 உயிரில் கலந்தவளே பாகம் 8 ( இறுதி பாகம் ) )
” எனக்கும் அதே நாளில்தான், அன்று நீ என்னை முத்தமிட்டு போனாய் அல்லவா, அதன் பிறகு உன் ஞாபகமாகவே இருந்தது, உன்னிடம் பேச வேண்டும் போல் தோன்றியது, ஆனால் உனது போன் நம்பர் என்னிடம் இல்லை, உன்னிடம் பேச முடியாமல் நான் தவித்துக் கொண்டிருந்த பொழுதுதான் நீ எனக்கு போன் செய்தாய், உன்னிடம் பேசிய பிறகுதான் என் தவிப்பு அடங்கியது, அப்பொழுதுதான் உணர்ந்தேன் உன் மேல் எனக்கு இருந்த காதலை “
” நான் உங்களை ஏமாற்றி விட்டேன் என்று அத்தை சொன்ன பொழுது உங்களுக்கு என் மேல் கோபம் வரவில்லையா?” என்று சித்ரா கேட்டாள்.
” அப்பொழுது எனக்கு கோபம் வந்தாலும் என் அம்மாவின் அந்த நிலையில் என்னால் அதை வெளிப்படுத்த முடியவில்லை, அதன் பிறகு யோசித்துப் பார்த்தால் நீ ஒன்றும் ஏமாற்றுகிற பெண்ணல்ல, நீ அப்படி பொய் சொன்னதற்கு ஏதாவது ஒரு காரணம் இருக்கும் என்று எனக்கு தோன்றியது ” என்று சந்தோஷ் சொன்னான்.
” தான் அவனை ஏமாற்றினாலும் அதற்கும் காரணம் இருக்கும் என்று நம்பி இருக்கிறானே, அப்படி என்றால் இவனுக்கு என் மீது எவ்வளவு காதல் இருக்கிறது!” என்று நினைத்தவள், “அன்று இதே ஏரியில் படகில் செல்லும் பொழுது முத்தமிட்ட சந்தோசை தள்ளிவிட்டவள் இன்று அவனது காதலுக்கு பரிசாக தானே தனது இதழை அவனுக்கு கொடுத்தாள்.”
இவ்வாறு ஒரு வருடமாக அரும்பாக வளர்ந்த அவர்கள் காதல் மொட்டு அன்றைய நாளில் திருமணம் என்ற மலராக மலர்ந்தது.
திருமணம் முடிந்தவுடன் சந்தோஷும் சித்ராவும் மீனாட்சி மற்றும் கிருஷ்ணன் தம்பதியின் கால்களில் விழுந்து ஆசி பெற்றனர்.
” மிகவும் மகிழ்ச்சி தம்பி, நீயும் சித்ராவும் நெடுங்காலம் நன்றாக வாழ வேண்டும் ” என்று சொன்னார் மீனாட்சி ஒரு பத்திரத்தை சந்தோஷின் கையில் கொடுத்தாள்.
” சித்தி, என்ன பத்திரம் இது?” என்ற கேள்வி சந்தோஷிடம் இருந்து வந்தது.
” உன் தந்தை ஆசைப்படி காந்திபுரம் நிலத்தில் வீடுகள் கட்டி முடிந்துவிட்டது ” உன் திருமணத்திற்கு உன் சித்தியின் பரிசு என்று மீனாட்சி சொன்னாள்.
” நீங்கள் இப்படி செய்தால்தான் உங்கள் அன்பு எனக்கு தெரியுமா, இது எனக்கு தேவை இல்லை ” என்று சந்தோஷமாக மறுத்தான்.
” உங்கள் அப்பாவின் ஆசை இதுதான் என்றும் அதை நிறைவேற்ற நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டீர்கள் என்று எங்களுக்கு தெரியும், வாங்கிக்கொள்ளுங்கள் மாப்பிள்ளை ” என்று கிருஷ்ணன் வற்புறுத்த சந்தோஷ் வாங்கிக்கொண்டான். ( Tamil Novels Episode 8 உயிரில் கலந்தவளே பாகம் 8 ( இறுதி பாகம் ) )
இதுவரை மனதால் ஒன்றிணைந்திருந்த சந்தோஷ் சித்ரா ஜோடி அன்று இரவு மன்மதன் எய்த அம்புகளை தாங்கிக்கொண்டு மன்மத லீலையை அரங்கேற்றினர்.
அடுத்த மூன்றாவது மாதத்தில் சித்ரா கருவுற்றாள், அந்த செய்தி குடும்பத்தினர் அனைவர் மனதிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது, பத்தாவது மாதத்தில் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தாள்.
” புதிய வரவை குடும்பத்தினர் அனைவரும் கொண்டாட ஆரம்பித்தனர், கௌரி என்று குழந்தைக்கு பெயரிட்டார்கள்.
4 வருடங்கள் கழித்து :
இரவு சித்ராவை நெருங்கி தனது கைகளை போட்டான் சந்தோஷ்.
” கைய எடுங்க, பாப்பா தூங்குகிறாள் எழுந்துவிட போகிறாள் ” என்று சித்ரா சினுங்கினாள்.
” ஏய்! ரொம்ப நாள் ஆகிவிட்டது, பாப்பாவும் நன்றாக தூங்குகிறாள், வா நாம் அடுத்த அறைக்கு சென்று விடலாம் ” என்று சந்தோஷ் கூப்பிட ” பாப்பா எழுந்திருந்தால் அழுவாள், வேண்டாங்க ” என்ற பதில் சித்ராவிடம் இருந்து வந்தது.
” பாப்பாவுக்கு நான்கு வயதாகிறது, இன்னும் தனியாக விளையாட விடுவது எவ்வளவு பெரிய தவறு தெரியுமா? நாம் அவள் கூட விளையாட தம்பியோ தங்கையோ தயார் செய்யலாம் ” என்று சித்ராவை தனது இரு கைகளாலும் தூக்கி கொண்டு சென்றான் சந்தோஷ்.
அவர்கள் அங்கு சென்று அவர்கள் வேலையை பார்க்கட்டும், நாம் கிளம்பலாம்.
சுபம்
Tamil Novels Episode 8 உயிரில் கலந்தவளே பாகம் 8 ( இறுதி பாகம் ) பதிவில் சந்தோஷ், சித்ரா காதல் சுபமாக நிறைவு பெற்றதை எழுதியுள்ளேன்.
Tamil Novels Episode 7 உயிரில் கலந்தவளே பாகம் 7
”