Tamil Novels Episode 7 உயிரில் கலந்தவளே பாகம் 7

Tamil Novels Episode 7 உயிரில் கலந்தவளே பாகம் 7 பதிவு உயிரில் கலந்தவளே நாவலின் முக்கிய பாகம் ஆகும். உயிரில் கலந்தவளே பாகம் 7 பதிவை படித்து மகிழுங்கள்.

Tamil Novels Episode 7 உயிரில் கலந்தவளே பாகம் 7

சந்தோஷுக்காக காத்திருந்து அவன் வராத காரணத்தினால் தனது வீட்டிற்கு திரும்பிய சித்ரா, தனது வீட்டின் சூழ்நிலை மாறி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தாள்.

வீட்டின் ஹாலில் உள்ள சோபாவில் வாடிக்கையாளர் உடனான சந்திப்பிற்கு செல்லவேண்டிய அத்தை, தந்தை மற்றும் தாய் ஆகிய மூவரும் அமர்ந்திருந்தனர். அவர்கள் மூவரின் முகத்திலும் ஏதோ நடக்கக் கூடாத ஒரு காரியம் நடந்து விட்டது போன்ற முகபாவனை இருந்தது.

” என்ன அத்தை, வீட்டில் இருக்கிறீர்கள்! முக்கியமான வாடிக்கையாளருடன் ஒரு சந்திப்பு இருந்ததே அதற்கு நீங்கள் போகவில்லையா? என்ற கேள்வியுடன் அத்தையை சித்ரா பார்த்தாள்.

சிறிது நேர காத்திருப்புக்கு பிறகு பதில் வராமல் போகவே தனது கேள்வியை தந்தையிடம் திருப்பினாள் ” என்னப்பா, ஏதாவது பிரச்சினையா? எல்லோர் முகத்திலும் ஒரு விதமான கவலை தெரிகிறது! “

தந்தையிடம் அவள் கேட்ட கேள்விக்கு அவள் தாய் சுசிலாவிடம் இருந்து பதில் வந்தது ” சித்திரலேகா எஸ்டேட்டின் உரிமையாளர் கௌரிக்கு அதாவது ‘உங்கள் அப்பாவின் அத்தான் மனைவிக்கு’ இன்று மாலை 4 மணி அளவில் காரில் சென்று கொண்டிருக்கும் பொழுது ஆக்சிடென்ட் ஆகி விட்டது, மிகவும் ஆபத்தான நிலையில் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

சித்ராவால் சுத்தமாக நம்ப முடியவில்லை காலையில்தான் கௌரி சித்ராவிடம் பேசிவிட்டு அவர்களது காதலை சேர்த்து வைப்பதாக வாக்குறுதி கொடுத்து விட்டுப் போயிருக்கிறார், அவர் சென்ற சில மணி நேரங்களில் இப்படி ஒரு செய்தியை தான் கேட்போம் என்று அவள் நினைத்து பார்க்கவில்லை.

அத்தை கௌரியை நினைத்தும். சந்தோஷை நினைத்தும் சித்ராவின் கண்களில் கண்ணீர் வர ஆரம்பித்தது, சிறிது நேரம் கழித்து ” அப்பா வாங்கப்பா, நாம் எல்லோரும் சென்று அத்தையை பார்த்து விட்டு வரலாம் “

சித்ரா அப்படி சொல்வாள் என்று யாரும் எதிர்பார்க்காததால் மூன்று பேரும் அவளை விசித்திரமாக பார்த்தனர்!

” ஏய்! உனக்கு பைத்தியம் ஏதாவது பிடித்து விட்டதா? நமக்கும் அவர்களுக்கும் பேச்சுவார்த்தை கிடையாது என்று உனக்கு தெரியுமா தெரியாதா? அவள் என் வாழ்வை அழித்தவள், அவளை நாம் போய் பார்க்க வேண்டுமா ” என்ற காட்டமான வார்த்தைகள் மீனாட்சியிடம் இருந்து வந்தது.

” அத்தை அது முடிந்து கிட்டத்தட்ட 28 ஆண்டுகள் ஆகிவிட்டன, அதுவுமில்லாமல் உங்களுக்கு மாமாவை பிடித்திருந்தாலும் மாமாவுக்கு கௌரி அத்தையைதான் பிடித்திருந்தது, நீங்கள் மாமாவை திருமணம் செய்திருந்தால் அவருடைய வாழ்க்கையும் கெட்டுப்போய் உங்களுடைய வாழ்க்கையும் வீணாகியிருக்கும், நம்மைப் பிடிக்காத ஒருவருடன் எப்படி அத்தை மகிழ்ச்சியாக வாழ முடியும்? ” என்று தனது அத்தைக்கு அவளது தவறை சுட்டிக்காட்டினாள் சித்ரா.

அதன் பிறகு மேலும் தனது பேச்சைத் தொடர்ந்த சித்ரா ” கௌரி அத்தை நமக்கு யார்? நம்முடைய சொந்தம்தானே, அவர்களுக்கும் நம்மை விட்டால் யார் இருக்கிறார்கள்? சுக துக்கத்தில் பங்கு எடுப்பதுதானே உறவு, நாம் சுகத்தில் பங்கு எடுக்காவிட்டாலும் அவர்களின் துக்கத்திலாவது பங்கெடுக்க வேண்டும் “

சித்ராவின் பேச்சுக்கு பிறகு சிறிது நேரம் அனைவரிடத்திலும் மௌனம் நீடித்தது.

” சரி, எனக்கு அவர்கள் மீதுள்ள கோபம் குறையவில்லை ஆனால் நீங்கள் அவர்களை சென்று பார்த்துவிட்டு வாருங்கள் ” என்று மீனாட்சி சொன்னார். ( Tamil Novels Episode 7 உயிரில் கலந்தவளே பாகம் 7 )

அத்தை இவ்வளவு தூரம் இறங்கி வந்ததே பெரிய விஷயம் என்பதால் வேறு ஒன்றும் செய்ய முடியாது என்று அறிந்த சித்ரா தனது தந்தையைப் பார்த்தாள்.

” சரி அக்கா, என்ன இருந்தாலும் அவர்கள் நமது அத்தானின் மனைவி, நம்மை விட்டால் அவர்களுக்கு வேறு யாரும் உறவு கிடையாது, அதனால் நாம் போய் அவர்களை பார்க்க வேண்டியது கட்டாயம் அதனால் நாங்கள் மூவரும் சென்று கௌரி அக்காவை பார்த்து விட்டு வருகிறோம் ” என்று கிருஷ்ணன் சொன்னார்.

அடுத்த அரை மணி நேரத்திற்குள் மூவரும் கிளம்பினர், அவர்களது கார் மதுரையை நோக்கி சென்றது.

மதுரை தனியார் மருத்துவமனை :

ஐசியூவில் மருத்துவர்களும், மருத்துவ ஊழியர்களும் கௌரியின் உயிரை காப்பாற்ற போராடிக் கொண்டிருக்க, வாசலில் சோகத்துடன் மருத்துவர்களின் நல்ல பதிலுக்காக சந்தோஷ் காத்திருந்தான்.

அவனின் நீண்ட காத்திருப்புக்கு பிறகே மருத்துவர்கள் ஐசியூவில் இருந்து வெளிவந்தனர், தலைமை மருத்துவர் சந்தோஷிடம் “என்னுடைய அறைக்கு வாருங்கள், உங்களுடன் பேச வேண்டும் ” என்று சந்தோஷை அழைத்தார்.

மருத்துவருடனே அவருடைய அறைக்குள் சந்தோஷ் சென்றான். மருத்துவர் தன்னுடைய இருக்கையில் அமர்ந்து கொண்டு சந்தோசை எதிரே உள்ள நாற்காலியில் அமர சொன்னார்.

” உங்கள் அம்மாவிற்கு விபத்து நடந்த பொழுது தலையில் பலமான அடிபட்டுள்ளது, அதனால் அவர்களின் மூளையில் பலமான பாதிப்பு ஏற்பட்டு விட்டது, நாங்கள் எங்களால் முடிந்த அளவு முயற்சி செய்து பார்த்துவிட்டோம், இனி அவர்களை காப்பாற்றுவது இயலாத காரியம் ஆனால் அவர்களுக்கு சுய நினைவு உள்ளது அதனால் அவர்களின் கடைசி சில மணி நேரங்களை அவர்களுடன் களியுங்கள், அவர்களுக்கு யாரையும் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தால் அவர்களையும் வரச் சொல்லுங்கள் ” என்று கௌரியின் நிலையை மருத்துவர் அப்பட்டமாக சொன்னார்.

கௌரியை காப்பாற்றுவது இனி முடியாத காரியம் என்பதால் அவரை ஐ சி யுவிலிருந்து தனியறைக்கு மாற்றினார்கள், அவரின் அருகில் அமர்ந்த சந்தோஷ் ” உங்களுக்கு ஒன்றும் ஆகாது கவலைப்படாதீர்கள் ” என்று தனது தாயை தேற்ற பார்த்தான். ஆனால் அவனால் தன்னையே தேற்ற முடியாத காரணத்தால் அங்கேயே கதறி அழுதான்.

தன் உடல் வலியை விட தன் மகனின் கண்ணீர் மனதிற்கு அதிக வலியை தர சந்தோஷின் கையை தனது கைகளுக்குள் ஏந்திக் கொண்ட கௌரி ” சந்தோஷ், நான் பிழைக்க மாட்டேன் என்பது எனக்கே தெரிகிறது, எனக்கு திருமணம் ஆனதிலிருந்து உன் தந்தை என்னை ராணி போல் தான் வைத்திருந்தார், எங்கள் காதலின் பரிசாக இளவரசன் போல் மகன் நீ கிடைத்தாய் ” என்று பேசிய கௌரிக்கு அதிகமாக மூச்சிரைத்தது.

தாயின் உடல்நிலை பேசுவதால் மோசமாவதை கண்ட சந்தோஷ் ” அம்மா பேச்சை விடுங்கள், நாம் பிறகு வீட்டில் பேசிக் கொள்ளலாம் ” என்று தன் தாய் பேசுவதால் ஏற்படும் உடல் பிரச்சனைகளை தடுக்க முயன்றான்.

ஆனால் அவனது தாயோ ” நான் இப்பொழுது பேசாவிட்டால் எப்போதும் பேச முடியாமல் போய்விடும், அதனால் நான் கண்டிப்பாக பேசியே ஆகவேண்டும் ” என்று சொன்னவர் மேலும் தனது பேச்சை தொடர்ந்தார்.

” எனக்கு இருக்கும் ஒரே குறை உன்னை நான் தனியாக விட்டுவிட்டு போகிறேன் என்பதுதான் ஆனால் அந்த மனக் கவலையும் எனக்கு இல்லாமல் இருக்க நீதான் ஒரு பெண்ணை பார்த்து வைத்திருக்கிறாயே ” என்று கௌரி சொன்னார். ( Tamil Novels Episode 7 உயிரில் கலந்தவளே பாகம் 7 )

சந்தோஷுக்கு ஆச்சரியமாக இருந்தது தான் தேவியை காதலிப்பது அம்மாவுக்கு எப்படி தெரியும்? என்று யோசித்தான்,

அதையே அவனது தாயும் கேட்டாள் ” நம்ம காதலிப்பது அம்மாவுக்கு எப்படி தெரியும் என்று யோசிக்கிறாயா? ”

” ஆனால் அதற்கு முன் நான் சில விஷயங்களை உனக்கு சொல்லவேண்டும், அது உனக்கு கோபத்தை ஏற்படுத்தினாலும் பொறுமையாக கேட்க வேண்டும் ” என்ற அவனின் தாய் தன் உடலில் ஏற்படுகின்ற தாங்க முடியாத வலியை மீறி மேலும் பேச தொடங்கினார்.

” நீ காதலிக்கிறாயே தேவி என்ற பெண் அவள் யார் என்று உனக்கு தெரியுமா? “

” ஆம் தெரியும், மீனாட்சி எஸ்டேட்டில் சூப்பர்வைசராக வேலை பார்க்கிறாள், குடும்பத்தின் வறுமை காரணமாக சென்னையில் இருந்து இங்கே வந்து வேலை பார்க்கிறாள் ” என்று சந்தோஷ் தனது தாய் கேட்ட கேள்விக்கு பதில் சொன்னான்.

” அவள் சொன்னது பொய் சந்தோஷ், அவள் உனது மாமா கிருஷ்ணனின் மகள் சித்ராதேவி, மீனாட்சி எஸ்டேட்டில் வேலை பார்ப்பவளில்லை, அந்த எஸ்டேட்டிற்கு முதலாளி ” என்று சொன்ன கௌரி தனது மகனின் முகத்தை பார்த்தார்.

சந்தோஷ் முகத்தில் இதை அவன் எதிர்பார்க்கவில்லை என்ற அதிர்ச்சி அப்பட்டமாக தெரிந்தது.

” சந்தோஷ் உனக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சியாகதான் இருக்கும் என்று எனக்கு தெரியும், ஆனால் சித்ரா உன்னை ஏமாற்ற வேண்டும் என்று நினைக்கவில்லை, அவள் உன்னை உண்மையாக காதலிக்கிறாள், அவள் உன் வாழ்வில் இருந்தால்தான் உன் பெயரில் உள்ள மகிழ்ச்சி உன் வாழ்விலும் நிலைத்து இருக்கும் ” என்று கௌரி சொன்னார்.

” என்னுடைய கடைசி ஆசை ஒன்று இருக்கிறது அதை நீ நிறைவேற்றி வைப்பாயா ” என்று அவர் தன் மகனிடம் கேட்க ” அம்மா, நீங்கள் கடைசி ஆசை என்று எல்லாம் பேசாதீர்கள், உங்கள் உடல்நலம் பூரணமாக குணமாகி நன்றாக வீட்டிற்கு திரும்புவீர்கள் ” என்று கண்ணீர் வடிய தன் தாயைப் பார்த்து சொன்னான்.

” சரி அதை விடு, என்னுடைய ஆசை என்னவென்றால் என்னால் பிரிந்து போன இரண்டு குடும்பங்களும் உன்னால் ஒன்று சேர வேண்டும், சித்ரா தான் எனக்கு மருமகளாக வரவேண்டும், அவளின் வயிற்றில் மீண்டும் உனது மகளாக நான் வந்து பிறப்பேன் ” என்று கௌரி தனது மகனிடம் சொன்னாள்.

” இதற்கு சம்மதம் என்று சத்தியம் செய்து கொடு ” என்று சந்தோஷுடம் கௌரி கேட்க அவனும் தன் கையைத் தன் தாயின் கையின் மேல் வைத்து சத்தியம் செய்து கொடுத்தான்.

அதன்பிறகு சிறிது நேரத்திலே சித்ராவும் அவளது தாய் தந்தையரும் வந்துவிட்டனர்.

கௌரியை மருத்துவமனையில் படுக்கையில் பார்த்த சித்ரா கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்தாள்.

கிருஷ்ணனும் சுசீலாவும் கௌரியின் அருகில் சென்று உங்களுக்கு ஒன்றும் ஆகாது கவலைப்படாதீர்கள் என்று ஆறுதல் கூறினார்கள். ( Tamil Novels Episode 7 உயிரில் கலந்தவளே பாகம் 7 )

தனது மகனையும், சித்ராவையும் அருகில் அழைத்த கௌரி, சந்தோஷின் கையை எடுத்து சித்ராவின் கையில் சேர்த்து வைத்துவிட்டு அவரது உயிர் உடலை விட்டுப் பிரிந்தது,

தன் தாய் இறந்துவிட்டார் என்பதை சந்தோஷோல் நம்பவே முடியவில்லை, சிறுபிள்ளை போல் தன் தாயின் உடல் மீது விழுந்து தேம்பி தேம்பி அழ ஆரம்பித்துவிட்டான்.

” தனக்கு மிகவும் வருத்தமாக இருந்தபோதும் சந்தோஷை இப்பொழுது தேற்ற வேண்டியது முக்கியம் என்பதால் அவனருகில் சென்று அவனது கையைப் பிடித்து சித்திர ஆறுதல் கூறினாள்.

அடுத்த நாள் கொடைக்கானலில் சந்தோஷின் வீட்டில் கௌரிக்கான் இறுதி சடங்குகள் நடந்துகொண்டிருக்க ” அதற்கு சித்ரா, அவளது பெற்றோரை தவிர மீனாட்சியும் வந்திருந்தாள்.

தனது தாய்க்கான இறுதி சடங்குகளை முடித்த சந்தோஷ் தனது தாயின் அறையில் தன் தாயின் படத்தை பார்த்துக் கொண்டிருந்தான்,

அப்பொழுது அவனது பின்னால் ஒரு குரல் கேட்டது ” தம்பி உன்னிடம் சிறிது பேச வேண்டும், பேசலாமா ” என்ற குரலுக்குரியவர் மீனாட்சி.

” ம், சொல்லுங்க ” என்ற பதில் சந்தோஷிடம் இருந்து வந்தது.

” தம்பி என்னை மன்னித்துவிடு, உன் அம்மாவின் மரணத்திற்கு காரணம் நான்தான் ” என்று சந்தோஷ் எதிர்பார்க்காத விஷயத்தை மீனாட்சி சொன்னாள்.

Tamil Novels Episode 7 உயிரில் கலந்தவளே பாகம் 7 பதிவில் சந்தோஷின் தாய் கௌரி இறந்ததையும், கௌரியின் ஆசையையும் எழுதியுள்ளேன்.

Tamil Novels Episode 6 உயிரில் கலந்தவளே பாகம் 6

Tamil Novels Episode 8 உயிரில் கலந்தவளே பாகம் 8 ( இறுதி பாகம் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *