Tamil Novels Episode 6 உயிரில் கலந்தவளே பாகம் 6

இந்தப் பதிவில் Tamil Novels Episode 6 உயிரில் கலந்தவளே பாகம்-6 பதிவில் சந்தோஷ் சித்ராவிடம் காதலை சொன்ன பிறகு நடந்த நிகழ்வுகளை எழுதியுள்ளேன்.

Tamil Novels Episode 6 உயிரில் கலந்தவளே பாகம்-6

ஏரியில் சந்தோஷ் காதலை சித்ராவிடம் சொன்ன பிறகு சில நாட்கள் அவர்களின் காதல் பயணம் இனிமையாக சென்றது, அடுத்த சில நாட்களில் காந்திபுரம் நிலம் சித்ராவின் பெயரில் பதிவு செய்யப்பட்டது.

என்னதான் சந்தோஷுக்கு சித்ராவுடனான காதல் பயணம் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும், தன் தந்தையின் ஆசையை நிறைவேற்ற முடியவில்லையே என்ற குறை மனதில் இருக்கத்தான் செய்தது.

மனதில் எப்போதும் சோர்வுடன் காணப்பட்டான், அவனுடைய இந்த சோர்வு அவன் தாய் கௌரியின் கண்ணில் இருந்து தப்பவில்லை. ” என்னடா, கொஞ்சநாளா எப்பொழுதும் சோர்வுடனே காணப்படுகிறாய்? ஏதாவது பிரச்சனையா? என்று அவன் தாய் கேட்டாள்.

” அதெல்லாம் ஒன்னும் இல்லைம்மா, கொஞ்ச நாளாக வேலை அதிகம் அதான் கொஞ்சம் டயர்டா இருக்கு.”

” இது உடல் உழைப்பால் ஏற்பட்ட சோர்வு இல்லை, உன் மனதில் ஏதோ பிரச்சனை இருக்கிறது, பிள்ளையின் ஒவ்வொரு அசைவையும் தாய் அறிந்து வைத்திருப்பாள் ” என்று மீண்டும் தனது பேச்சை தொடர்ந்தார், ” உன் பிரச்சனை என்னவென்று என்னிடம் சொல், அதற்கு ஏதாவது தீர்வு கிடைக்குமா என்று நாம் கலந்து ஆலோசிப்போம் ” என்று கௌரி தொடர்ந்து தன் மகனிடம் சொன்னார்.

” அம்மா, நாம் அப்பாவின் ஆசைப்படி நம்மிடம் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு வீடு கட்ட இடம் பார்த்து வைத்து இருந்தோம் அல்லவா! அந்த இடத்தை இப்போது மீனாட்சி எஸ்டேட் உரிமையாளர்கள் வாங்கிவிட்டார்கள், கொடைக்கானலில் அதைத்தவிர வேறு இடம் மொத்தமாக வீடுகட்ட அமையவில்லை, அதனால் அப்பாவின் ஆசையை எப்படி நிறைவேற்றுவது என்று புரியாமல் தவிக்கிறேன்” என்று சந்தோஷ் தனது தாயிடம் சொன்னான். ( Tamil Novels Episode 6 உயிரில் கலந்தவளே பாகம் 6 )

” பிரச்சனை என்று ஒன்று இருந்தால் அதற்கு தீர்வு என்று ஒன்று இருக்கும், அதனால் நீ கவலை படாதே, இந்த காரியத்திற்கு ஏதாவது ஒரு தீர்வு கிடைக்கும், நீ உன் மனதை போட்டுக் குழப்பிக் கொள்ளாதே ” என்று கௌரி சொன்னாள்.

தன் தாயிடம் தனது பிரச்சினையை சொன்ன சந்தோஷுக்கு மனதில் பாரம் நன்றாக குறைந்தது போல் இருந்தது, தன் தாயின் மடியில் தலை வைத்து சிறிது நேரம் படுத்து உறங்கினான்.

அடுத்த நாள் காலை வழக்கம் போல் தனது பணிகளை கவனிக்க சந்தோஷ் தனது அலுவலகத்திற்கு சென்று விட்டான், அதன் பிறகு 11 மணியளவில் தனது வீட்டை விட்டு கிளம்பிய கௌரி சென்றடைந்த இடம் மீனாட்சி எஸ்டேட்டின் அலுவலகம்.

அங்கு ரிசப்ஷனிஸ்ட்டிடம் நான் உங்கள் மேடம் சித்ராவை சந்திக்க வேண்டுமென்று கவுரி கேட்டார். ” கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணுங்க மேடம், நான் அவர்களிடம் கேட்டு விட்டு உங்களுக்கு பதில் சொல்கிறேன் ” என்று ரிசப்ஷனிஸ்ட் அவரிடம் சொன்னாள். ( Tamil Novels Episode 6 உயிரில் கலந்தவளே பாகம் 6 )

அங்கே உள்ள சோபாவில் அமர்ந்த கௌரிக்கு ” நேற்று மகன் மனதில் இருந்த பிரச்சினையை சொன்னதிலிருந்து அவனது பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும் ” என்ற எண்ணம் மனதில் ஓடியது.

அதனால் தனது நிறுவனத்தின் மேனேஜரிடம் மீனாட்சி எஸ்டேட்டின் தற்போதைய நிலவரங்களை பற்றி விசாரித்தார், மீனாட்சி எஸ்டேட்டின் எம்டியாக கிருஷ்ணன் இருந்தாலும் முக்கியமான முடிவுகளை எல்லாம் அவரது மகளான சித்ராதான் எடுக்கிறார் என்று மேனேஜர் சொன்னார்.

அதை கேட்ட கௌரியின் மனதில் சில யோசனைகள் தோன்றியது, அடுத்த நாள் காலை தனது யோசனைகளை நிறைவேற்றுவதற்காக கௌரி சித்ராவை பார்ப்பதற்காக காத்துக் கொண்டிருக்கிறார். சிறிது நேரம் கழித்து ரிசப்ஷனிஸ்ட் கௌரியிடம் சித்ரா அழைப்பதாக சொல்ல சித்ராவின் அறையை நோக்கி சென்றார்.

சித்ராவின் அறை கதவை தட்டிவிட்டு அழைப்புக்காக காத்திருக்க, ” எஸ், கம் இன் ” என்ற ஆங்கில வார்த்தைகளின் மூலம் சித்ரா கௌரியை உள்ளே அழைத்தாள்.

கௌரி உள்ளே சென்று சித்ராவை பார்த்தவுடன் மிக அழகான பெண்ணாக இருக்கிறாளே என்று தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டார்.

” வாங்க மேடம் உட்காருங்கள் ” என்ற சித்ரா தனது எதிரில் உள்ள நாற்காலியை காட்ட, கௌரி அதில் அமர்ந்து கொண்டார்.

” சொல்லுங்க மேடம் எதற்காக என்னை பார்க்க வந்திருக்கிறீர்கள் ” என்று சித்ரா கேள்வி கேட்டாள்.

” என் பெயர் கௌரி, நீ சித்ரலேகா எஸ்டேட்ஸ் பற்றி கேள்விப்பட்டிருப்பாய் என்று நினைக்கிறேன், அதன் உரிமையாளர் சந்தோஷின் அம்மாதான் நான் ” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

சந்தோஷின் அம்மாவா இவர்கள், அதனால்தான் ஏதோ பழகிய முக ஜாடை போல் தெரிகிறதோ? என்று மனதில் நினைத்துக் கொண்ட சித்ரா, ” அப்படியா மேடம் உங்களைப் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி ” என்று கையெடுத்து வணக்கம் சொன்னாள், வருங்கால மாமியார் அல்லவா!

அவளுக்கு பதில் வணக்கம் சொன்ன கௌரி, ” எங்களை பற்றி உங்கள் வீட்டில் உனக்கு சொல்லி இருக்கிறார்களா இல்லையா என்று எனக்கு தெரியவில்லை, இருந்தாலும் நானே சொல்கிறேன்,

உங்கள் குடும்பமும் எங்கள் குடும்பம் மிகவும் நெருங்கிய உறவு, உன் அப்பாவுக்கு என் கணவர் மாமாவின் மகன், அதாவது அத்தான்! உன் அத்தைக்கு என் கணவரை திருமணம் முடித்துவைக்க குடும்பத்தில் உள்ள அனைவரும் ஆசைப்பட்டார்கள், உன் அத்தைக்கும் அந்த ஆசை இருந்தது, ஆனால் என் கணவருடன் கல்லூரியில் ஒன்றாக படித்த என்னை அவர் விரும்பியதால் குடும்பத்தில் பல பிரச்சினைகள் ஏற்பட்டது, அதன் காரணமாக இரண்டு குடும்பமும் பிரிந்து விட்டது.” என்று கௌரி தனது கடந்த காலத்தில் நடந்த நிகழ்வுகளை சித்ராவிற்கு சொன்னார்.

” ம்! தெரியும், அம்மா சொல்லி இருக்கிறார்கள் அத்தை ” என்று சொல்லிவிட்டு, நீங்கள் எனக்கு அத்தை முறைதானே வேண்டும், நான் அத்தை என்று கூப்பிடலாம்தானே? என்று சித்ரா கேள்வியையும் எழுப்பினாள்.

” தாராளமாக சொல் கண்ணே, உனக்கு இல்லாத உரிமையா!” என்ற பதில் கௌரியிடமிருந்து வந்தது.

சரி அத்தை என்று சொன்ன சித்ரா, நான் உங்களிடம் சில விஷயங்கள் சொல்ல வேண்டும், நான் சொல்லாமல் போக போக பிரச்சினைகள் தான் வளரும் என்று எனக்கு தோன்றுகிறது.

” என்ன விஷயம் சொல்லம்மா ” என்று கௌரி சம்மதம் கொடுத்தார்.

” எனக்கு உங்கள் மகன் சந்தோஷை நன்றாக தெரியும், அவருக்கும் என்னை தெரியும் ஆனால் நான்தான் மீனாட்சி எஸ்டேட்டில் உரிமையாளர் கிருஷ்ணனின் மகள் சித்ரா என்பது தெரியாது என்று தொடங்கியவள் தான் சந்தோசை சந்தித்தது முதல் தான் இங்கே வேலை பார்க்கும் ஒரு சாதாரண சூப்பர்வைசர் என்று அவனை ஏமாற்றியது, அதன் பின் இருவரும் காதல் வயப்பட்டது” என்று அனைத்தையும் கௌரியிடம் சொன்னாள்.

” உங்கள் மகனும் என்னை நேசிக்கிறார், நானும் அவரை என் உயிரினும் மேலாக நேசிக்கிறேன்! ஆனால் நமது குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள், நான் உங்கள் மகனை ஏமாற்றியது எல்லாம் சேர்ந்து என் காதலை என்னிடம் இருந்து பிரித்துவிடுமோ என்று எனக்கு பயமாக இருக்கிறது, நீங்கள்தான் எங்களை சேர்த்து வைக்க வேண்டும் ” என்று கௌரியை சித்ரா வேண்டினாள்.

” கண்டிப்பாக உங்கள் காதலை நான் சேர்த்து வைப்பேன்மா, உன்னை மாதிரி மருமகள் கிடைப்பதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும், இனி நீ எதற்கும் கவலைப்படாதே, உனக்கும் சந்தோஷுக்கும் உன் வீட்டு சம்மதத்துடன் திருமணம் செய்து வைப்பது என் பொறுப்பு .”

தன் மகனுக்காக காந்திபுரம் இடத்தை பேசி முடித்து எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தோடு வந்த கௌரிக்கு இப்பொழுது அதை பற்றி கேட்கவே மனதில்லை, சூழ்நிலையை பயன்படுத்தி கொண்டு நாம் இப்பொழுது அதை கேட்பதாக நினைத்து விடுவாளோ என்று நினைத்து அந்த இடத்தை கேட்கும் எண்ணத்தை கைவிட்டாள்.

அதன் பிறகு சித்ராவிடம் விடை பெற்றுக் கொண்டு தன் வீட்டிற்கு திரும்பிய கௌரி, எப்படி சந்தோஷ் சித்ரா திருமணத்தை நடத்துவது என்பது பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தார்.

கௌரி விடைபெற்றுச் சென்ற சிறிது நேரத்தில் சித்ராவிற்கு சந்தோஷம் இருந்து அலைபேசி அழைப்பு வந்தது.

” ஹேய் தேவி, என்ன செய்கிறாய்?” என்ற கேள்வி சித்ரா போன் காலை அட்டெண்ட் செய்தவுடன் சந்தோஷிடருந்து வந்தது. ( Tamil Novels Episode 6 உயிரில் கலந்தவளே பாகம் 6 )

” வாடிக்கையான வேலைகளைதான் நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன், வேறு ஒன்றும் விசேஷமாக செய்யவில்லை” என்று சித்ரா பதில் சொன்னாள்.

” சரி, உன்னை பார்த்து மூன்று நாட்கள் ஆகிவிட்டது, அதனால் இன்று சந்திக்கலாமா? என்று சந்தோஷ் சித்ராவிடம் கேட்டான்.

” வேண்டாம் சந்தோஷ், இன்றைக்கு கொஞ்சம் வேலை அதிகமாக இருக்கிறது, முதலாளி கொஞ்சம் ஓவர் டைம் பார்க்க சொல்லியிருக்கிறார், அதனால் இன்னொரு நாள் சந்திக்கலாம் ” என்று சித்ரா சொன்னாள்.

” ஏய்! ப்ளீஸ் உன்னை பார்த்து மூன்று நாட்கள் ஆகிவிட்டது, உனக்கு என்னை பார்க்க வேண்டும் என்ற ஆசை இல்லையா? இன்று சந்திக்கலாமே ” என்று சந்தோஷ் கெஞ்சும் குரலில் கேட்க, சித்ரா உருகிவிட்டாள்.

” சரி, முதலாளியிடம் சொல்லி விட்டு நான் மாலை சரியாக 5 மணிக்கு நாம் எப்பொழுதும் சந்திக்கும் பூங்காவிற்கு வந்துவிடுகிறேன், நீங்களும் வந்து விடுங்கள்” என்று சொன்னாள்.

” ஓகே தேவி, நான் வந்துவிடுகிறேன் ” என்று சொல்லி விட்டு சந்தோஷ் அலைபேசி இணைப்பை துண்டித்தான்.

சந்தோஷ் இணைப்பை துண்டித்த பிறகு சித்ரா தனது அத்தை மீனாட்சிக்கு கால் செய்து ” அத்தை எனக்கு சாயங்காலம் ஒரு முக்கியமான வேலை இருக்கிறது, அதனால் இன்று மாலை 6 மணிக்கு சந்திக்க வேண்டிய வாடிக்கையாளரை நீங்கள் சந்தித்து பேசுகிறீர்களா? ப்ளீஸ் ” என்று சித்ரா சந்தோஷை சந்திப்பதற்காக அத்தையின் உதவியை நாடினாள்.

” வர வர உனக்கு பொறுப்பே இல்லை, சரி போய் உன் வேலையை பார், வாடிக்கையாளர் சந்திப்பை நான் பார்த்துக்கொள்கிறேன் ” என்று மீனாட்சி சித்ராவிற்கு உதவி கரம் நீட்டினார்.

மாலை 4.55க்கு சித்ரா பூங்காவை சென்றடைந்தாள். ஆனால் எப்பொழுதும் சித்ராவிற்கு முன் வந்து காத்திருக்கும் சந்தோஷ் அன்று வரவில்லை.

5.10 வரைக்கும் காத்திருந்த சித்ரா அதன்பிறகு சந்தோஷுக்கு கால் செய்தாள், முழு அழைப்பு சென்றும் அவன் போனை எடுக்கவில்லை, டிரைவிங்கில் இருப்பான் அதனால் எடுக்கவில்லை போல சிறிது நேரத்தில் வந்து விடுவான் அல்லது திரும்ப அழைப்பான் என்று காத்திருந்தாள், ஆனால் 5.30 ஆகியும் அவன் வரவுமில்லை அவனிடம் இருந்து எந்தவித அழைப்பும் வரவில்லை, அவனின் எண்ணிற்கு திரும்ப அழைத்தவளுக்கு சுவிட்ச் ஆப் என்ற பதிலே கிடைத்தது.

காலையில் கௌரியை சந்தித்த பொழுது அவருடைய அலைபேசி எண்ணை வாங்கி இருந்த சித்ரா இப்பொழுது அவளுக்கு அழைத்து பார்த்தாள், கௌரியும் எடுக்காமல் போகவே அவளது எண்ணிற்கு மேலும் இரண்டு முறை முயற்சி செய்து விட்டு தனது வீட்டிற்கு கிளம்பினாள்.

வீட்டை வந்தடைந்தவளுக்கு அங்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது, வீட்டின் ஹாலில் அவளது தந்தை, தாய் மற்றும் வாடிக்கையாளர் சந்திப்பிற்கு போகவேண்டிய அத்தையும் வீட்டில் இருந்தார்கள்.

மூவரின் முகமும் ஏதோ நடக்கக் கூடாத சம்பவம் நடந்துவிட்டது என உணர்த்தியது.

Tamil Novels Episode 6 உயிரில் கலந்தவளே பாகம் 6 பதில் சந்தோஷின் தாய் இருவரின் காதலுக்கு எவ்வாறு உதவுகிறது என்பதை எழுதியுள்ளேன்.

Tamil Novels Episode 5 உயிரில் கலந்தவளே பாகம் 5

Tamil Novels Episode 7 உயிரில் கலந்தவளே பாகம் 7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *