Tamil Novels Episode 5 உயிரில் கலந்தவளே பாகம் 5

Tamil Novels Episode 5 உயிரில் கலந்தவளே பாகம் 5 ல் சந்தோஷ் சித்ரா இடையே உள்ள அழகான காதல் கதையை ஒரு அழகான ரொமான்ஸ் நாவலாக உங்களுக்கு என்னுடைய படைப்பை எழுதியுள்ளேன்.

Tamil Novels Episode 5 உயிரில் கலந்தவளே பாகம் 5

சந்தோஷுக்கு மனது முழுவதும் சித்ராவின் நினைவாகவே இருந்தது, அவளிடம் பேச வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அவள் போன் நம்பர் இல்லாத காரணத்தால் அவனால் பேச முடியவில்லை, அந்த நேரத்தில்தான் அறிமுகமில்லாத ஒரு எண்ணில் இருந்து போன் கால் வந்தது.

” ஹலோ யார் பேசுவது?” என்று சந்தோஷ் போனில் கேள்வி கேட்டான்.

“நான்தான்” என்று எதிர்முனையில் வந்த குரலை கேட்டவுடன் சந்தோஷுக்கு மனது இறக்கை கட்டி பறக்க ஆரம்பித்தது, இவ்வளவு நேரம் யாரிடம் பேசவேண்டும் என்று தவித்துக் கொண்டிருந்தானோ அவளே அவனுக்கு கால் செய்து இருக்கிறாள்,

சந்தோஷ் தனது மனதுக்குள் ஏற்பட்ட காதலின் வேதியல் மாற்றத்தை மறைத்துக்கொண்டு ” ம், இப்பொழுதுதானே என்னை வீட்டில் இறக்கி விட்டு கிளம்பி சென்றாய், அதற்குள் எதற்காக கால் செய்திருக்கிறாய்? போகிற வழியில் ஏதாவது பிரச்சினையா ” என்று சந்தோஷ் உண்மையான அக்கறையுடன் கேட்டான்.

” அதெல்லாம் ஒன்றும் இல்லை உங்களிடம் பேச வேண்டும் போல் தோன்றியது, அதனால்தான் உங்களுக்கு கால் செய்தேன், நான் அப்படி செய்ததால் நீங்கள் எதுவும் தவறாக நினைத்து விட்டீர்களா?” என்று சித்ரா கேட்டாள். ( Tamil Novels Episode 5 உயிரில் கலந்தவளே பாகம் 5 )

” என்ன செய்தாய் நீ? எனக்கு எதுவும் புரியவில்லை சற்று விளக்கமாக சொல்கிறாயா”

” நீங்கள் வீட்டுக்குள் செல்லும்பொழுது …. ” என்று சொல்லிவிட்டு பேசமுடியாமல் சித்ரா திணறினாள்.

” ம், நான் வீட்டுக்குள் செல்லும்பொழுது, அதன்பிறகு சொல்”

சிறிது நேர மௌனத்திற்கு பிறகு, ” நான் உங்களுக்கு முத்தமிட்டேனே, அதைப்பற்றி நீங்கள் எதுவும் தவறாக நினைத்து விட்டீர்களா? என்று சித்ரா கேட்டாள்.

” ஓ! நீ முத்தமிட்டாயோ? அதை நான் மறந்தே போய் விட்டேன் ” என்று அவன் சொல்ல ” மறந்துட்டீங்களா ! ” என்று கேட்ட சித்ராவின் குரலில் இதுவரை இருந்த உற்சாகம் வடிந்து விட்டது.

” ஆமாம், எதற்காக நீ எனக்கு முத்தமிட்டாய் ?” என்று சந்தோஷ் கேள்வி கேட்டான்.

” உங்கள் மனம் வருத்தப்படுவதை என்னால் தாங்க முடியவில்லை அது எனக்கு கஷ்டமாக இருந்தது, அதனால்தான் அப்படி செய்தேன் என்று சித்திரா பதில் சொன்னாள்.

” ஓ ! நீ முத்தமிட்டால் மனதில் உள்ள வருத்தம் எல்லாம் சரியாகிவிடுமா? அப்படி என்றால் எனக்கு தினமும் என் மனது வருத்தப்பட்டு கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆசை வருகிறதே! என்று அவன் சொன்னான்.

அந்த பக்கத்தில் இருந்த சித்ராவின் கன்னம் வெட்கத்தில் கோவைப்பழம் போல் சிவந்து விட்டது, ” சீ! எதற்காக இப்படி பேசுகிறீர்கள், எனக்கு ஒரு மாதிரி இருக்கிறது ” என்று சித்ரா சொன்னாள்.

” ஓ! முத்தம் கொடுக்கும் போது உனக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை ஆனால் இப்பொழுதுதான் ஒரு மாதிரி இருக்கிறதா? நல்ல வேடிக்கை போ ” என்று சந்தோஷ் சிரித்தான்.

மேலும் சிறிது நேரம் அவர்களின் காதல் சம்பாஷனைகள் தொடர்ந்தது, அதன் பிறகு ” நாளை உன்னை சந்திக்க வேண்டுமே ” என்று சந்தோஷ் சொல்ல, எதற்கு? என்ற கேள்வி சித்ராவிடம் இருந்து வந்தது.

” உன் பொருள் ஒன்று என்னிடம் இருக்கிறது அதை உன்னிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும் ” என்று சந்தோஷ் சொன்னான்.

” என்னுடைய பொருள் எதுவும் உங்களிடம் உள்ளதாக எனக்கு ஞாபகம் இல்லையே, அப்படி என்ன பொருள் உங்களிடம் இருக்கிறது?” என்று சித்ரா கேட்டாள்.

” நாளை நாம் நேரில் சந்திக்கும் பொழுது நான் அந்த பொருளை உன்னிடம் திருப்பி தருகிறேன், அப்பொழுது தெரியும் என்னிடம் உன் பொருள் இருக்கிறதா இல்லையா ” என்று சொல்லிவிட்டு நாளை நாம் இப்பொழுது எங்கு சந்திக்கலாம் என்று சந்தோஷ் கேட்க,

” அதை ஏன் என்னிடம் கேட்கிறீர்கள், அதையும் நீங்களே சொல்லிவிட வேண்டியதுதானே ” என்று சித்ரா லேசாக சலித்துக் கொண்டாள்.

” சரி கோபப்படாதே, நாளை மாலை 4 மணியளவில் நாம் நமது ஊரில் உள்ள ஏரியில் சந்திக்கலாம் ” என்று சந்தோஷ் நாளைய சந்திப்பிற்கு உரிய இடத்தை முடிவு செய்தான்.

மேலும் சிறிது நேரம் பேசிவிட்டு இருவரும் அலைபேசியின் தொடர்பை துண்டிக்க மனதில்லாமல், நேரம் ஆகிவிட்டது என்ற கட்டாயத்தின் பெயரில் அலைபேசி தொடர்பை துண்டித்தனர்.

அடுத்த நாள் காலை 9 மணிக்குதான் சித்ரா விழித்தெழுந்தாள், எப்பொழுதும் 6 மணிக்கு எழுந்து உடற்பயிற்சியை மேற்கொள்ளும் சித்தராவால் அன்று காலதாமதமாக எழுந்ததால் வழக்கமாக மேற்கொள்ளும் உடற்பயிற்சிக்கு கூட நேரமில்லை, அவசரமாக குளித்துவிட்டு அலுவலகத்திற்கு கிளம்பும் போது மணி 10 ஆகியிருந்தது. எப்பொழுதும் 10 மணிக்கு அலுவலகத்தில் இருக்கும் சித்ரா அன்று வீட்டிலிருந்து கிளம்பவே 10 மணி ஆகிவிட்டது.

தனது ரூமில் இருந்து வெளியே வந்த சித்ராவை அவளது தாய் சாப்பிட அழைக்க ” அம்மா இப்போதே நேரம் ஆகிவிட்டது, அலுவலகத்தில் முக்கியமான மீட்டிங் வேறு இருக்கிறது, , அதனால் அலுவலக கேண்டீனில் சாப்பிட்டு கொள்கிறேன் ” என்று சொல்லிவிட்டு கிளம்பியவளை, ” எதற்காக இவ்வளவு தாமதமாக எழுந்தாய் ? இரவு அலுவலக வேலை ஏதும் பார்த்துக் கொண்டு இருந்தாயா ” என்ற தாயின் கேள்வி தடுத்து நிறுத்தியது.

” ஆமாம் அம்மா, ஒரு முக்கியமான கிளைன்ட்டிடம் அதிக நேரம் பிசினஸை பற்றி டிஸ்கஸ் செய்ய வேண்டியிருந்தது, அதனால் தூங்க தாமதமாகிவிட்டது ” என்று சொல்லிவிட்டு சித்ரா அலுவலகத்திற்கு கிளம்பினாள். ( Tamil Novels Episode 5 உயிரில் கலந்தவளே பாகம்-5 )

அலுவலகத்திற்கு சென்ற சித்ராவிற்கு வேலையில் கவனம் செல்லவில்லை, அன்று மாலை சந்தோஷுடன் நடக்கவிருக்கும் சந்திப்பை பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தாள், அவனை சந்திக்க செல்லும் போது என்ன உடை உடுத்த வேண்டும்? அவனைப் பற்றி அவ்வளவாக ஒன்றும் தெரியாதே ! அவனுக்கு பிடித்த மாதிரி எப்படி அவனை பார்க்க செல்வது என்று சிந்தித்துக் கொண்டிருந்தாள்.

எப்பொழுதும் கட கட வென ஓடும் கடிகாரம் அன்று ஏனோ மெதுவாகவே ஓடியது, ஒருவழியாக மனதில் படபடப்புடனே நேரத்தை கடத்திய சித்ரா, மாலை 3 மணி அளவில் தன்னுடைய உடை மாற்றும் அறைக்கு சென்று மெருன் கலர் சுடிதாருக்கு மாறினாள்.

ஒற்றை ஜடை, முகத்திற்கு லேசான பவுடர், சிறிய ஸ்டிக்கர் பொட்டு என்று சிம்பிளாக தன்னை அலங்கரித்துக் கொண்டவள், 3.30 மணி அளவில் தன அலுவலகத்திலிருந்து கிளம்பினாள். 3.50 மணிக்கு கொடைக்கானல் ஏரியை அடைந்து காரை விட்டு இறங்கியவுடன். சந்தோஷை தேட வேண்டிய அவசியமே இல்லாமல் அவனே அவள் கண் முன் வந்து நின்றான்.

சித்ராவிற்க்காக அதிக நேரம் காத்திருந்திருந்திப்பான் போல ” என்ன மேடம் என்னை பார்க்க ரொம்ப ஆவலாக வந்திருக்கீங்க போல ” என்ற கேள்வி அவனிடமிருந்து வந்தது.

எல்லா ஆண்களிடமும் எப்பொழுதும் தைரியமாகப் கண்ணைப் பார்த்துப் பேசும் சித்ரா, இப்பொழுது சந்தோஷிடம் எதுவும் பேச முடியாமல் திண்டாடினாள். ” எவ்வளவு தைரியமான பெண் நான், ஆனால் இவன் முன்னாள் மனம் ஏன் இவ்வளவு திண்டாடுகிறது, ஓ! இதற்குப் பெயர்தான் நானமோ?” என்று மனதுக்குள் சிந்தித்துக்கொண்டே சந்தோஷுடன் சேர்ந்து ஏரியை நோக்கி நடந்தாள்.

ஏரியில் சுற்றுலா வந்த காதல் ஜோடிகள் கூட்டம் சற்று அதிகமாகவே இருக்கவே ” நாம் ஏன் ஏரிக்குள் ஒரு படகு பயணம் போய்விட்டு வரக்கூடாது? என்று சந்ததோஷ் அவளிடம் கேள்வி கேட்டான்.

“இங்கு நாம் ஓரமாக நின்று பேசலாமே” என்று சித்ரா பதிலளித்தாள். ” இங்கே கூட்டம் சற்று அதிகமாக இருக்கிறது, அதனால்தான் சொன்னேன், உனக்கு விருப்பம் இல்லை என்றால் வேண்டாம்” என்று சந்தோஷ் சொல்ல ” சரி நாம் படகு பயணம் சென்று வரலாம் ” என்ற பதில் சித்ராவிடம் இருந்து வந்தது.

சந்தோஷ் கவுண்டரில் இரண்டு பேர் செல்லும் ஒரு படகை வாடகைக்கு எடுத்து வந்தான், அந்த படகு பெடல் போட்டு ஓட்டும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது, படகில் இருவரும் ஒருவருக்கு ஒருவர் எதிர்திசையில் அமர்ந்துகொண்டு பெடலை அழுத்த ஆரம்பித்தனர், படகானது சிறிது நேரத்தில் ஏரி தண்ணீரைக் கிழித்துக் கொண்டு நடு ஏரிக்கு சென்றது.

” என்னுடைய அப்பா சிறுவயதில் இருந்தே எனக்கு சொல்லித தந்த பாடம் என்னவென்றால் நமக்கு ஒருவர் என்ன கொடுத்தாலும் நாம் அதை அவருக்கு திருப்பி கொடுக்கும் பொழுது பல மடங்காகத் திருப்பிக் கொடுக்க வேண்டும், அதனால்தான் எங்கள் கஷ்ட காலத்தில் எங்களுக்கு துணைநின்ற தொழிலாளர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று என் தந்தை விரும்பினார்.”

சந்தோஷ் பேசுவதைக் கவனித்த சித்ரா, அவன் ஏதோ முக்கிய காரியத்தை பற்றி பேசப் போகிறான் என்று நினைத்து அவன் சொன்னதை ஆமோதித்தாள், சந்தோஷ் மேலும் தனது பேச்சை தொடர்ந்தான், ” அதேபோல் நேற்று என் மனம் மிகவும் வருத்தத்தில் இருந்தது, என் வருத்தத்தைப் போக்க நீ எனக்கு தந்ததை நான் உனக்கு பல மடங்காகத் திருப்பித் தரவேண்டும் அல்லவா? என்று சொல்லிவிட்டு இதுவரை பேசிக் கொண்டிருந்த தனது உதடுகளுக்கு சித்ராவின் உதடுகளை பூட்டாக்கினான்.

இதை சற்றும் எதிர்பார்க்காத சித்ரா, அவனிடம் இருந்து தன்னை வலுக்கட்டாயமாக விலக்கிக் கொண்டாள், ” ஏய் என்ன ஆச்சி நீ கொடுக்கும் பொழுது நான் சும்மாதானே இருந்தேன், இப்பொழுது நீ மட்டும் ஏன் விலகி ஓடுகிறாய்?”

” அன்றைக்கு இரவு 11 மணிக்கு மேல் ஆகிவிட்டதால் உங்கள் தெரு வெறிச்சோடி ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்தது, ஆனால் இன்று நம்மைச் சுற்றி எத்தனை படகுகள் செல்கிறது, அதில் இருக்கும் ஆட்கள் நம்மை பார்த்தால் நம்மை பற்றி என்ன நினைப்பார்கள்? உங்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமாக இல்லையா? என்று சித்ரா தன்னுடைய பதிலையே கேள்வியாக மாற்றினாள்.

” நம்மைச் சுற்றி உள்ள படகுகளை நீ நன்றாக கவனி, அவர்களுக்கு நம்மை பார்க்க நேரம் இருக்கிறதா? ” என்று சந்தோஷ் சொன்னதைக் கேட்டு அந்த படகுகளை பார்த்த சித்ராவிற்கு தர்மசங்கடமான நிலை ஏற்பட்டது, அவர்களின் படகை சுற்றி இரண்டு படகுகள் சென்று கொண்டிருந்தன, அந்த படகில் இருந்தவர்கள் புதிதாக திருமணமான தேனிலவு ஜோடிகள் போல, அவர்கள் நான்கு சுவற்றுக்குள் செய்ய வேண்டிய தங்களுடைய காதல் லீலைகளை படகிலே அரங்கேற்ற முயற்சி செய்து கொண்டிருந்தனர்,

” அங்கு நடந்து கொண்டிருப்பதை பார்த்தாயா? அவர்களுக்கு நம்மை கவனிக்க நேரம் இருக்கிறதா ” என்று சந்தோஷ் கேட்க ” சீ! உங்களுக்கு சுத்தமாக விவஸ்தையே இல்லை, சரி என்னை எதற்காக வர சொன்னீர்கள்” அதைச் சொல்லுங்கள் என்று சித்ரா பேச்சை மாற்றினாள். ( Tamil Novels Episode 5 உயிரில் கலந்தவளே பாகம் 5 )

” நேற்று நீ என்னை வீட்டில் விட்டு செல்லும் பொழுது என்னோடு சேர்த்து உன் மனதையும் விட்டு சென்றுவிட்டாய், அதை நான் பத்திரமாக வைத்துள்ளேன் ஆனால் நான் உன்னுடைய மனதை திருப்பித் தருவதற்கு பதிலாக என்னுடைய மனதை உனக்கு தருகிறேன்” என்று தனது காதலை சொன்ன சந்தோஷ் தன் சட்டைப் பையில் உள்ள ஒரு மோதிரத்தை எடுத்து அவளது பதிலுக்காக காத்திருந்தான்.

அவள் தனது பதிலை சொற்களால் சொல்வதற்கு பதில் தன் விரலை அவன் மோதிரம் மாட்ட ஏதுவாக காட்டினாள், அவள் தனது காதலை ஏற்றுக் கொண்டுவிட்டாள் என்பதை புரிந்து கொண்ட சந்தோஷ் SD என்று பெயர் பதிந்திருந்த தங்க மோதிரத்தை அவளது விரலில் மாட்டி விட்டான்.

இருவருக்குள்ளும் இதுவரை விதையாய் இருந்த நேசம் விழுதாய் வளர்ந்தது, சிறிதுநேரம் மௌனமாக ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டிருக்க, நேரம் 7 மணியை தாண்டியது, நேரமாகி விட்டது கிளம்ப வேண்டும் என்று சொல்ல இருவரும் படகை கரைக்கு திருப்பினர்.

” சித்ராவின் கார் வரை சென்று அவளை ஏற்றி விட்ட சந்தோஷ் ” நீ என் உயிரில் கலந்துவிட்டாய், இனி நீ இல்லை என்றால் என் உயிரும் இல்லாது போய்விடும் ” அவளைப் பார்த்துச் சொன்னான்.

” நானும் உங்கள் மீது மிகுந்த நேசம் வைத்துள்ளேன், நீங்கள் ஒருவரே எனது வாழ்க்கை ” என்று அவனது காதல் வார்த்தைகளுக்கு தன்னுடைய நேசத்தை அவனுக்கு எடுத்துரைத்தாள்.

பிரிய மனமில்லாமல் இருவரும் அங்கிருந்து கிளம்பினர்.

Tamil Novels Episode 5 உயிரில் கலந்தவளே பாகம் 5 சந்தோஷ் சித்ரா ஒருவருக்குள் உள்ள காதலை மற்றவர்களிடம் தெரிவித்து சம்மதம் பெற்றதை எழுதியுள்ளேன்.

Tamil Novels Episode 4 உயிரில் கலந்தவளே பாகம் 4

Tamil Novels Episode 6 உயிரில் கலந்தவளே பாகம் 6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *