Tamil Novels Episode 4 உயிரில் கலந்தவளே பாகம் 4

இந்த பதிவில் Tamil Novels Episode 4 உயிரில் கலந்தவளே பாகம் 4 ல் சந்தோஷ் சித்ராவின் காதல் கதையை நாவல் வடிவில் இனிமையாக எழுதி இருக்கிறேன்.

Tamil Novels Episode 4 உயிரில் கலந்தவளே பாகம் 4

சந்தோஷ் இப்படி குடித்துவிட்டு தன் காரின் மீதே வந்துவிழுவான் என்று சித்ரா எதிர்பார்க்கவில்லை, கீழே விழுந்த சந்தோஷை எழுப்ப முயன்றவள் தோற்றுத்தான் போனாள், அவன் எழும்ப முடியாமல் தள்ளாடுவதை கண்ட சித்ரா கைகொடுத்து தூக்கி தன் தோள்மேல் சாய்த்து அவளது காரில் அவனை ஏற்றினாள்.

அவனைப் பின் சீட்டில் படுக்க வைத்துவிட்டு காரை ஸ்டார்ட் செய்து அவனது வீட்டை நோக்கி காரை செலுத்தினாள், ” தண்ணீர், தண்ணீர், தண்ணீர் வேண்டும்” என்ற குரல் பின் சீட்டில் சந்தோஷிடம் இருந்து வர காரை ஓரமாக நிறுத்திவிட்டு தன் காரில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அவனிடம் கொடுத்தாள், ஒரு மடக்கு தண்ணீர் குடித்த சந்தோஷ் காரிலேயே வாமிட் எடுத்தான்.

” அட கடவுளே இது வேறயா” என்று சலித்துக் கொண்ட சித்ரா வேறு ஒரு தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொண்டு காரின் பின் கதவை திறந்து சந்தோஷை கைத்தாங்கலாக காரிலிருந்து வெளியே கொன்டு வந்தாள், போதையில் தள்ளாடியபடியே நின்ற சந்தோஷுக்கு முகம் கழுவி விட்டு அவன் சட்டையையும் தண்ணீரால் துடைத்து விட்டாள்.

அதன்பிறகு அவனை முன்சீட்டில் ஏற்றிக் கொண்டு காரை ஸ்டார்ட் செய்து கிளம்பினாள், வாந்தி எடுத்த பிறகு சிறிதளவு போதை தெளிந்த சந்தோஷ் அருகிலிருந்த சித்ராவை அடையாளம் கண்டு ” தேவி நீங்கள் எப்படி என்னுடன்? இது யாருடைய கார்?” என்று சந்தோஷ் தனது கேள்விக்கணைகளை சித்ராவை நோக்கி தொடுத்தான்.

” இது என் முதலாளி மீனாட்சி அம்மாவின் கார், டிரைவர் இன்று விடுப்பு எடுத்து விடவே ஒரு அவசர வேலையாக மதுரை வரை செல்லவேண்டியிருந்தது, மதுரை சென்று வேலையை முடித்து திரும்பி வரும் வழியில் நீங்கள் என் கார் மீது வந்து விழுந்து விட்டீர்கள், அதன் பிறகு என்ன நடந்தது என்று நீங்கள் நன்றாக யோசித்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்!, என்று கூறிவிட்டு சித்ரா மௌனமாகிவிட்டாள்.

சந்தோஷ் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கவே சிறிது நேரம் கழித்து சித்ராவே பேச்சை தொடர்ந்தாள், ” நாம் இதற்கு முன்னால் இரண்டு தடவை சந்தித்திருக்கிறோம், நீங்கள் என்னிடம் பேசியதை வைத்தும், பழகியதை வைத்தும் நீங்கள் நல்ல மனிதர், மற்றவர்களுக்கு நீங்கள் உதாரணமாக இருப்பீர்கள் என்று நினைத்தேன், ஆனால் இன்று தான் உங்களை பற்றி நன்றாக புரிந்து கொண்டேன்! நீங்கள் ஒரு குடிகாரன் என்று.”

சித்ரா பேசியதற்கு எதுவும் பதிலளிக்காமல் சிறிது நேரம் மௌனமாக இருந்த சந்தோஷ், ” நான் இன்று தான் முதன் முதலாக குடித்தேன், என்னால் தாங்கிக் கொள்ள முடியாத ஒரு இழப்பை சந்தித்துவிட்டேன், அந்த வலியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் குடித்துவிட்டேன்.”

“ஓ! குடித்து விட்டதால் அந்த வலி போய்விட்டது அப்படித்தானே? நீங்கள் இழந்ததும் திரும்ப கிடைத்துவிட்டது சரியா?” அவள் குத்தலாக சந்தோஷை கேள்வி கேட்க, ( Tamil Novels Episode 4 உயிரில் கலந்தவளே பாகம் 4 )

” தவறுதான், நான் மது அருந்துவதால் என் இழப்பு சரியாகிவிடாது, என் வாழ்வில் நான் செய்த மிகப் பெரிய முட்டாள்தனம் மது அருந்தியது, இனி என் வாழ்வில் நான் ஒருபோதும் மது அருந்த மாட்டேன் இது என் அன்னையின் மீது சத்தியம், என்று சந்தோஷ் வாக்குறுதி அளித்தான்.

சந்தோஷ் குடித்துவிட்டான் என்பதால் அவன் மீது கோபத்தில் இருந்த சித்ரா, அவன் சொன்னதைக் கேட்டு சற்று கோபம் தணிந்து அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.

“ஒருவரிடம் நம்முடைய பிரச்சனையை சொல்லும் பொழுது அந்த பிரச்சனை பாதியாக குறையும் என்று பெரியவர்கள் சொல்வார்கள், ஆனால் என்னுடைய பிரச்சினையை யாரிடமும் சொல்ல தோன்றவில்லை, என் பிரச்சனை என் மனதை ஆக்கிரமித்துக் கொண்டு என்னை அழுத்தியது, அதைத் தாங்க முடியாமல்தான் நான் மதுவை நாடிச் சென்றேன், ஆனால் இப்பொழுது என் பிரச்சனையை உன்னிடம் கூற வேண்டும் போல உள்ளது, என்னுடைய பிரச்சினையை நீ கேட்பாயா தேவி? என்று சந்தோஷ் சோகம் நிறைந்த முகத்துடன் சித்ராவை பார்த்து கேட்க,

அவளுக்கு நெஞ்சுக்குள் ஏதோ ஒன்று பிறழ்வது போல் இருந்தது, அவனது சோகத்தை காண விரும்பாத அவளுடைய கண்களோ, “அவனை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு நீ கவலைப்படாதே உனக்கு நான் இருக்கிறேன்: என்று ஆறுதல் சொல்ல தூண்டியது.

தன் மனதை அடக்கியபடி “ம், சரி சார் சொல்லுங்கள், என்று சித்ரா சொல்ல,

சிறிய மௌனத்தின் மூலம் தனது மனதைத் தயார் செய்து கொண்ட சந்தோஷ் ” இப்பொழுது நீ வேலை பார்க்கிறாயே மீனாட்சி எஸ்டேட், அதுவும் என்னுடைய சித்திரலேகா எஸ்டேட்டும் ஒரே எஸ்டேட்டாகதான் இருந்தது, நீ சொன்னாயே உங்கள் மீனாட்சி முதலாளி, ” அவர்கள்தான் என் தந்தைக்கு அத்தை மகள்” என் அப்பாவுக்கும், மீனாட்சி சித்திக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது பெரியவர்களின் எண்ணமாக இருந்தது.

ஆனால் கல்லூரிக்கு படிக்க சென்ற என் தந்தை அங்கு கூட படித்த என் தாயை காதலித்தார், குடும்பத்தில் சில பல கலவரங்கள் வெடித்தது, அதன் பின்பே என் தாய் தந்தையின் திருமணம் நடைபெற்றது, அதன் காரணமாக என் அப்பாவின் அத்தை குடும்பமும், எங்கள் குடும்பமும் பிரிந்தது, எஸ்டேட்டும் இரண்டு பாகமாக பிரிந்தது, ஆனால் எங்களுக்கு கிடைத்த எஸ்டேட் பாகத்தில் மிகவும் கடினப்பட்டே தேயிலையை விலைய வைக்க வேண்டியிருந்தது,. ( Tamil Novels Episode 4 உயிரில் கலந்தவளே பாகம் 4 )

அதன் காரணமாக அதிகமான பொருள் செலவும், அங்கு வேலை பார்த்தவர்களின் அதிகப்படியான உழைப்பும் தேவைப்பட்டது, எஸ்டேட் பிரியும் பொழுதே அங்கு வேலை பார்த்தவர்களில் சிலர் எங்களிடம் வந்தாலும் எங்கள் எஸ்டேட்டை தயார் செய்ய அதிகப்படியான ஆட்கள் தேவைப்பட்டது, அதனால் வேலைக்கு ஆட்களை வெளியூரிலிருந்து நாங்கள் கூட்டி வந்தோம்.

நாங்கள் சம்பளம் கொடுத்தாலும் அவர்களிடமிருந்து கொடுக்கும் சம்பளத்திற்கு மூன்று அல்லது நான்கு மடங்கு அதிக வேலை வாங்க வேண்டிய சூழ்நிலை இருந்தது, அவர்கள் உழைப்பால்தான் சித்திரலேகா தேயிலைத்தோட்டம் ஓரளவு நல்ல நிலைமையில் இன்று உள்ளது, மீனாட்சி எஸ்டேட் அளவு இல்லை என்றாலும் அதற்கு பாதி அளவில் இருப்பதற்கு காரணம் எங்களிடம் வேலை பார்க்கும் எங்கள் தொழிலாளர்கள்தான்.

என்னுடைய தந்தை இறக்கும் பொழுது என்னை அழைத்து “நம்மிடம் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் நமக்காக கடுமையாக உழைத்திருக்கிறார்கள், நாம் அவர்களுக்கு சம்பளம் கொடுத்தாலும் அதை விட பலமடங்கு உழைப்பை அவர்களிடமிருந்து எடுத்துவிட்டோம், அதற்குப் பிரதிபலனாக அவர்கள் குடியிருக்க ஒவ்வொருத்தருக்கும் ஒரு வீடு கட்டிக் கொடுத்து விடு” என்று என் தந்தை இறக்கும் தருவாயில் கடைசியாக என்னிடம் கேட்டுக்கொண்டார். ( Tamil Novels Episode 4 உயிரில் கலந்தவளே பாகம் 4 )

என் தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்றுவதற்காக காந்திநகரில் வீடுகட்ட ஒரு இடமும் பார்த்துவிட்டேன், அந்த இடம் உரிமையாளரிடம் அந்த இடத்தில் நான் தொழிலாளர்களுக்காக வீடு கெட்ட போவதை எடுத்துச்சொல்லி அந்த இடத்தை எனக்கு விற்க அவரிடம் சம்மதமும் வாங்கிவிட்டேன், ஆனால் உங்கள் நிறுவனம் எனக்கு முன்பே அந்த இடத்தை விலைபேசி வைத்திருந்தனர் போல,

அதனால் அந்த நிலத்தை எனக்கு விலைக்கு விற்பதை தடை செய்து, அந்த இடத்தை தங்களுக்கு பேசி முடித்துவிட்டார் உங்கள் முதலாளி, இனி கொடைக்கானலில் அந்த இடத்தை போல வேறு இடம் கிடைப்பது கடினம், இனி என்னுடைய வீடு கட்டும் வேலை இப்போதைக்கு நிறைவேறுவதற்கு சாத்தியமில்லை, என் தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியவில்லையே என்ற இயலாமைதான் என்னை மதுவை நாடி செல்ல வைத்தது.

இதற்கெல்லாம் காரணம் உன் முதலாளியான மீனாட்சியும், அவர்களது தம்பி மகளான சித்ராவும்தான்”, சந்தோஷ் தன்னுடைய சோகக் கதையைச் சொல்லி முடிக்கவும் அவனுடைய வீடு வரவும் சரியாக இருந்தது.

சந்தோஷின் வீட்டின் முன்னால் காரை நிறுத்தியவுடன் சந்தோஷ் காரைவிட்டு இறங்கி மறுபுறம் சென்று தேவியிடம் ” உன்னிடம் பேசியதும் எனது மனதின் பாரம் மிகவும் குறைந்தது போல் உள்ளது, சரி இன்னொரு நாள் பார்க்கலாம்” என்று சொல்லிவிட்டு சந்தோஷ் தனது வீட்டை நோக்கி இரண்டு அடி எடுத்து வைக்க,

காரை விட்டு இறங்கிய சித்ரா ‘ சந்தோஷ் ‘ என்று அழைக்க, அவனுக்கோ அதிசயமாக இருந்தது, இதுவரை சந்தித்த மூன்று நாட்களில் சார் என்ற வார்த்தையை தவிர வேறு எப்படியும் தன்னை அழைக்காத தேவி இன்று சந்தோஷ் என்று அழைப்பதை கேட்டவுடன் மிகவும் ஆச்சரியமடைந்தான்.

அவனது அருகில் சென்ற சித்ரா ” உனது நல்ல மனதிற்காக உன் பிரச்சனை எல்லாம் தீர்ந்து இனி உனக்கு நல்லது தான் நடக்கும்” என்று சொல்லிவிட்டு சந்தோஷை கட்டிப்பிடித்து அவனது இதழில் தனது இதழ் பதித்தாள்.

அவன் இதழ் பதித்த அடுத்த நொடி அவன் தன்னை மறந்தான், பியர் அடித்ததால் கிடைத்த போதை என்ன போதை? அவள் இதழ் முத்தம் தந்த போதை அல்லவா மிகப்பெரிய போதை.

“மதுவினால் கிடைப்பதா போதை

இல்லை அவள் இதழ் முத்தத்தினால் கிடைப்பதுதான் போதை!”

என்று அவனது மனம் கவிதை பாட,

கவிதை, கனவுலக டூயட் ஆகியவற்றை முடித்துவிட்டு நினைவிற்கு வருவதற்குள், சித்ரா காரை எடுத்து சென்று விட்டாள், சந்தோஷ் முத்தத்திற்குப் பிறகு பார்த்தது சித்ராவின் கார் தன்னை விட்டு தூரமாக செல்வதைதான்.

“என்னடா இவ்வளவு நேரம் கழித்து வீட்டுக்கு வருகிறாய்” என்று கௌரி சந்தோஷிடம் கேட்டாள், கௌரி கேட்டவுடன்தான் தான் வீட்டுக்குள் வந்ததையே சந்தோஷ் உணர்ந்தான், “ஒன்றுமில்லை அம்மா, அலுவலகத்தில் வேலை சற்று அதிகம் அதனால்தான் வர தாமதமாகிவிட்டது” என்று தாயிடம் பொய் சொல்லிவிட்டு தன் அறைக்கு சென்று விட்டான்.

அறையின் வாசல் கதவை தட்டிய கௌரி சாப்பிடவில்லையா என்று கேட்க, ” வரும் வழியில் ஒரு நண்பனை பார்த்தேன், அவனுடன் ஹோட்டலில் சாப்பிட்டு விட்டேன்” என்று சொல்லிவிட்டு தன் படுக்கையில் படுத்தான். படுக்கையில் விழுந்தவனின் மனது முழுவதும் சித்ராதான் வந்தாள், சித்ராவின் மீது அவனுக்கு ஈர்ப்பு இருந்தது என்பது உண்மைதான், ஆனால் அவள் இதழ் முத்தம் தருவாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.

அவனுக்கு தேவியிடம் பேச வேண்டும் போலிருந்தது, ” அவன்தான் அவளிடம் அலைபேசி எண்ணை கொடுத்து இருக்கிறானே தவிர, அவளின் எண்ணை சந்தோஷ் பெறவில்லை, என்ன செய்வது என்று தெரியாமல் அவளிடம் பேசவேண்டும் என்ற ஏக்கத்தில் இருந்த சந்தோஷுக்கு, ஒரு அறிமுகம் இல்லாத எண்ணில் இருந்து அழைப்பு வந்தது.

Tamil Novels Episode 4 உயிரில் கலந்தவளே பாகம் 4 பதிவில் தனது மனதில் உள்ள கவலையின் காரணமாக சந்தோஷ் மது அருந்தியதும் அதன்பின் சித்ராவின் காதலையும் பார்த்தோம்.

Tamil Novels Episode 3 உயிரில் கலந்தவளே பாகம் 3

Tamil Novels Episode 5 உயிரில் கலந்தவளே பாகம் 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *