Tamil Novels Episode 3 – உயிரில் கலந்தவளே பாகம் 3

இந்தப் பதிவில் நாம் Tamil Novels Episode 3 உயிரில் கலந்தவளே பாகம் 3 ல் சந்தோஷ், சித்ராவின் காதல் கதையை பாகம் 3ல் விரிவாகப் பார்க்கப்போகிறோம்.

Tamil Novels Episode 3 உயிரில் கலந்தவளே பாகம் 3

செல்போனின் ரிங்டோன் மூலம் நிகழ்காலத்திற்கு திரும்பிய சித்ரா தன்னை அழைப்பது யார் என்று பார்க்க, அது அத்தை மீனாட்சியின் அழைப்பு, அத்தையின் அழைப்பிற்கு பதிலளித்த சித்ரா ” சொல்லுங்க அத்தை என்ன விஷயம்?”

” அது ஒன்றும் இல்லை, நமது நிறுவனத்திற்கு காந்திநகரில் சைட் ஒன்று பார்த்து வைத்திருந்தோம், ஆனால் அதில் ஒரு சிறிய பிரச்சினை உள்ளது”

” ஆம் தெரியும், ரேவதி மேடம் சொன்னார்கள், அந்தப் பிரச்சினையை எப்படித் தீர்க்கலாம் என்றுதான் நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன்” என்று மீனாட்சிக்கு சித்ரா பதிலளிக்க,

“அந்த நிலத்தின் உரிமையாளர் ஒரு மாதத்திற்கு முன்பு வெளிநாட்டிற்கு சென்றிருந்தான், நாளை காலை ஊருக்கு திரும்புகிறான், அவன் வந்தவுடன் நாம் இருவரும் சென்று அவனை பார்த்து விட்டு வந்து விட வேண்டும் இல்லை என்றால் இடம் நம் கை விட்டு போக வாய்ப்புள்ளது, எப்பொழுது சந்தர்ப்பம் கிடைக்கும் எப்படி ஆட்டையை போடலாம் என்று சில பேர் காத்துக் கொண்டிருக்கிறார்கள் அதனால் நாம் சீக்கிரமாகவும் கவனமாகவும் அந்த வேலையை முடித்து விட வேண்டும்” என்று மீனாட்சி நிலத்தின் உரிமையாளரை சிறிய மரியாதை கூட இல்லாமல் ஏக வசனத்தில் பேசினாள். ( Tamil Novels Episode 3 உயிரில் கலந்தவளே பாகம் 3 )

மீனாட்சி “ஆட்டையைப் போட சில பேர் காத்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று சொன்னது சந்தோஷைதான் என்பது சித்ராவுக்கு தெரியும். சந்தோசத்தை அவ்வாறு பேசியது சித்ராவுக்கு உள்ளுக்குள் ஏனோ வலித்தது.

” நாளை காலை நாம் சென்று பார்த்து விட்டு வந்துவிடலாம்” என்று சித்ரா சொல்ல, அத்தையும் சம்மதத்துடன் செல்போன் இணைப்பை துண்டித்தாள்.

அடுத்த நாள் காலை 11 மணியளவில் மீனாட்சியும், சித்ராவும் நிலத்தின் உரிமையாளர் சுந்தரருடைய வீட்டிற்கு சென்றனர்.

தன் வீட்டிற்கு வந்த மீனாட்சியையும், சித்ராவையும் வரவேற்ற சுந்தர் ” சொல்லுங்கள் நான் உங்களுக்கு என்ன செய்யணும்”

அதற்கு பதிலளிக்க சென்ற மீனாட்சியை நிறுத்திவிட்டு சித்ரா பேச்சை ஆரம்பித்தாள், ” உங்களுக்கு என்னை தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன், ‘நான் சித்ரா’ மீனாட்சி எஸ்டேட்டின் எம்டி கிருஷ்ணாவின் மகள், மீனாட்சி எஸ்டேட்டின் அசிஸ்டென்ட் டைரக்டர் பொறுப்பிலும் இருக்கிறேன்,” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு மேலும் பேச்சை தொடர்ந்தாள்.

“என் அப்பா முதலில் உங்களிடம் நிலத்தை விலை பேசிய பொழுது சரி என்று தானே சொன்னீர்கள், என்னுடைய அப்பா இரண்டு லட்சம் அட்வான்ஷும் கொடுத்திருக்கிறார், ஒரு வாரம் கழித்து நீங்கள் அட்வான்சை திருப்பிக் கொடுத்து அனுப்பி இருக்கிறீர்கள், உங்கள் திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம் என்று நான் தெரிந்து கொள்ளலாமா?” என்று சித்ரா கேட்க,

“என் சொந்த பிரச்சனைகளின் காரணமாக நான் உங்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியவில்லை, என்னை மன்னித்து விடுங்கள்!” என்று சாந்தமாகவே சுந்தர் பதிலளித்தார்.

உங்களின் இந்த திடீர் மாற்றத்திற்கு காரணம் சித்திரலேகா எஸ்டேட்டின் உரிமையாளர் சந்தோஷ் தானே? அவர் உங்களை மிரட்டினாரா அல்லது எங்களை விட உங்கள் நிலத்திற்கு அதிக விலை தருவதாக சொன்னாரா? என்ன காரணமாக இருந்தாலும் பரவாயில்லை, நாம் அதற்கான தீர்வை பேசி முடித்துக் கொள்ளலாம் என்று சொல்ல,

“பணம் ஒரு பிரச்சனை இல்லை, நானும் எனது இரண்டு தலைமுறையும் வாழ்வதற்கான சொத்துக்களும், பணமும் என்னிடம் இருக்கிறது, அதைப்போல் சந்தோஷ் ஒருவரை மிரட்டி தன்னுடைய காரியத்தை சாதித்துக் கொள்கிற ஆள் இல்லை, அவருக்கு என்னுடைய நிலம் தேவைப்படக்கூடிய காரணம் உங்களுடையதைவிட நியாயமானதாக இருந்தது, அதனால் அவருக்கு என் நிலத்தை விற்று விடலாம் என்று முடிவு செய்து விட்டேன் என்று கூறிவிட்டு, உங்களுக்கு என் நிலம் தேவைப்படுவதற்கான காரணம் என்ன?” என்று கேள்வி கேட்டார்.

“எங்கள் பிசினஸை விரிவுபடுத்துவதற்காக காந்திநகரில் புதிதாக தேயிலைத் தோட்டம் ஆரம்பிக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறோம், உங்கள் நிலம் புதிய தேயிலைத் தோட்டம் உருவாக்குவதற்கு சரியாக இருக்கும் என்பதால் உங்கள் நிலத்தை வாங்க முடிவு செய்துள்ளோம்” என்று சித்ரா பதிலளிக்க,

“நீங்கள் உங்கள் பிசினஸ் விரிவுபடுத்துவதற்காக என் நிலத்தை வாங்க முடிவு செய்து உள்ளீர்கள், ஆனால் சந்தோஷ் தன்னிடம் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு இலவசமாக வீடு கட்டி கொடுப்பதற்காக நிலத்தை வாங்க முடிவு செய்தார், நமக்கு தெரிந்தவகளுக்கு இலவசமாக 100 ரூபாய் கொடுப்பதற்கே நாம் யோசிப்போம் ஆனால் சந்தோஷ் தன்னிடம் வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளமும் கொடுத்து அவர்கள் நிம்மதியாக வாழ்வதற்கு வீடு கட்டிக்கொடுக்க முடிவு செய்துள்ளார், அவருக்கு இந்த நிலத்தை நான் விற்பனை செய்தால் என்னுடைய நிலம் ஒரு நல்ல காரியத்திற்கு பயன்பட்டது என்ற மன நிறைவு எனக்கு இருக்கும் அதனால் தான் அவருக்கு என்னுடைய நிலத்தை விற்க நான் முடிவு செய்தேன்.” ( Tamil Novels Episode 3 உயிரில் கலந்தவளே பாகம்-3 )

மீனாட்சிக்கும் சித்ராவுக்கும் ஆச்சரியமாகத்தான் இருந்தது, “தன்னிடம் வேலை பார்ப்பவர்களுக்காக இந்த நிலத்தை வாங்கி அவர்களுக்கு வீடு கட்டி கொடுக்க போகிறானோ என்று தன் மனதில் எழுந்த ஆச்சரியத்தை கேள்வியாகவே கேட்டுவிட்டாள்” மீனாட்சி.

“ஆம் அதற்கான எல்லா வேலைகளும் நடந்து கொண்டுதான் இருக்கிறது, இந்த நிலத்தை சந்தோஷ் பெயருக்கு மாற்றி விட்டால் வீடு கட்டுவதற்கான வேலைகளை தொடங்கி விடுவான்”என்று சுந்தர் சொல்ல.

அது எப்படி முடியும், நிலத்தை எப்படி அவனுக்கு விற்க முடியும் என்று கேட்கிறேன்? இந்தக் கேள்விக்கு சொந்தக்காரி மீனாட்சி.

கேள்வியைக் கேட்டுவிட்டு அந்த கேள்விக்கு தானே பதில் அளித்தாள், ” நாங்கள் இந்த இடம் எங்களுக்கு கிடைத்து விடும் என்று நம்பி அட்வான்ஸ் கொடுத்துவிட்டு, புதிய தேயிலை தோட்டம் ஆரம்பிப்பதற்கான பல வேலைகளை செய்து விட்டோம், இப்பொழுது நீங்கள் எங்களுக்கு விற்க மாட்டேன் என்று சொன்னால் அது எந்த விதத்தில் நியாயம்? என்று கோபப்பட,

அதற்கு சுந்தர்வ் பதில் சொல்ல, சுந்தர் மீனாட்சிக்கும் இடையே வாக்குவாதங்கள் நீடிக்க, கடைசியில் மீனாட்சிதான் வெற்றி பெற்றார்.

வேறுவழியில்லாமல் சுந்தரம் தனது நிலத்தை மீனாட்சி எஸ்டேட்டிற்கு விற்பனை செய்ய ஒத்துக் கொண்டார், இரண்டு நாளில் பத்திரப்பதிவு வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து விட்டு மீனாட்சியும் சித்ராவும் அங்கிருந்து கிளம்பினார்கள்.

என்னதான் தாங்கள் வந்த காரியம் வெற்றிகரமாக முடிந்தாலும், அதற்குரிய மகிழ்ச்சி சித்ராவிடம் சிறிதளவுகூட இல்லை. சந்தோஷ் ஒரு நல்ல காரியத்தை செய்ய முடிவெடுத்து இருக்கிறான் ஆனால் அந்த காரியம் நம்மால் தடைபட்டு விட்டதே என்ற வருத்தம்தான் சித்ராவிடம் அதிகமாக இருந்தது

மீனாட்சியும், சித்ராவும் சென்ற சிறிது நேரத்தில், சுந்தர் சந்தோஷத்திற்கு போன் செய்து தனது வீட்டிற்கு வருமாறு அழைத்தார். மதியம் ஒரு மணி அளவில் தனது வீட்டிற்கு வந்த சந்தோஷை சாப்பிட அழைத்தார், முதலில் முடியாது என்று மறுத்த சந்தோஷ் பின்பு சுந்தரின் வற்புறுத்தலின் காரணமாக அவருடன் சேர்ந்து சாப்பிட்டான்.

சாப்பிட்டு முடித்தவுடன் சிறிது நேரம் பொதுவான காரியங்களைப் பற்றி பேசிய சுந்தர் சிறிது நேரம் கழித்து மீனாட்சியும் சித்ராவும் தன் வீட்டிற்கு வந்து சென்றதையும், அவர்கள் தன்னிடம் பேசி காந்திபுரம் நிலத்தை அவர்களுக்கு விற்க சம்மதிக்க வைத்ததையும் பற்றி சொன்னார், “முதலில் அவர்களிடம் நான் ஒத்துக் கொண்டதால் வேறு எதுவும் என்னால் செய்ய முடியவில்லை மன்னித்துவிடு சந்தோஷ்.”

சந்தோஷுக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சியாகவே இருந்தது, இருந்தாலும் தன்னை சமாளித்துக் கொண்டு ” அதற்கு நீங்கள் என்ன செய்வீர்கள், நீங்கள் எதற்காக என்னிடம் மன்னிப்பெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள், அவர்களைப் பற்றி தெரிந்ததுதானே, அவர்கள் தங்கள் காரியங்களை சாதித்துக் கொள்ள என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்” என்று சொன்ன சந்தோஷ் மேலும் சிறிது நேரம் சுந்தரருடன் பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றான்.

சுந்தரின் வீட்டிலிருந்து கிளம்பிய சந்தோஷுக்கு மனது முழுவதும் கோபம், எரிச்சல், இயலாமை போன்றவைகள்தான் இருந்தன. சுந்தரிடம் பேசும்பொழுது மீனாட்சியும் அவருடைய மருமகளும் வந்து பேசி நிலத்தை அவர்களுக்கு விற்பனை செய்ய சம்மதம் வாங்கி விட்டு சென்றார்கள் என்று சொல்லியிருந்ததால், சந்தோஷ் மீனாட்சி மீதும், அவருடைய மருமகளகிய முகம் தெரியாத சித்ரா மீதும் மிக அதிகமான கோபத்தில் இருந்தான்.

கோபத்தை விடவும் தான் தன் தொழிலாளர்களுக்காக நீண்ட நாட்களாக கனவு கண்டு வைத்திருந்த தனது கனவு திட்டமான வீடு கட்டும் பணிக்கு இப்பொழுது வாய்ப்பு இல்லாமல் போய் விட்டதே என்ற வருத்தம் அதிகமாக இருந்தது.

சந்தோஷ் சிறுவயதில் இருந்தே எந்த ஒரு காரியத்திற்கும் அவ்வளவாக கஷ்டப்பட்டவன் இல்லை, நினைத்த காரியங்கள் எல்லாம் நினைத்தபடியே நடந்தது அவனது வாழ்க்கையில். என்னதான் செல்வ செழிப்பான வாழ்க்கையை வாழ்ந்து இருந்தாலும் மற்றவர்களுக்கு உதவுவதுதான் சிறந்த குணம் என்று ராஜேந்திரன், கௌரி தம்பதியினரால் சொல்லி வளர்க்கப்பட்டவன்,

அவனது தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்த்தவர்களில் சில பேர் கொடைக்கானலை பூர்விகமாகக் கொண்டவர்கள் என்றாலும் பலபேர் வெளியூரிலிருந்து இங்கு வந்து தங்கி வேலை பார்க்கிறார்கள், அவர்களுக்கு வீடு கட்டி கொடுக்க வேண்டும் என்ற தனது நீண்டநாள் திட்டம் இனி கனவாகி போய்விட்டது என்பதால் மிகுந்த வருத்தமடைந்தவன், வருத்தத்தை தாங்க முடியாமல் இதுவரை எந்த தீய பழக்க வழக்கங்களுக்கும் இடம் கொடுக்காமல் இருந்த தன் மனதை மாற்றி மதுக்கடையை நோக்கி சென்றான்.

மதுக் கடையில் உள்ள பலருக்கும் சந்தோஷை தெரிந்திருந்ததால் அவனை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்! அங்கு ஒரு இருக்கையில் அமர்ந்த அவனுக்கு தான் என்ன செய்ய வேண்டும், எதை வாங்கிக் குடிக்க வேண்டும் என்று கூட தெரியவில்லை, அங்கு சப்ளை செய்து கொண்டிருந்த ஒருவனை அழைத்து இருப்பதில் எது அதிகமாக போதை ஏறும் என்று கேட்டான்?

அந்த சப்ளையருக்கு சந்தோஷ் யார் என்றும், இதுவரை குடிபழக்கம் இல்லாத நல்லவன் என்றும் தெரிந்திருந்ததால் அதிக போதை ஏறுவது பியர் என்று சொன்னான், சந்தோஷ் அதையே கொண்டு வர சொல்ல சப்ளையர் சந்தோஷுக்கு ஒரு பியரை கொண்டுவந்து ஒரு கிளாஸில் ஊற்றி விட்டு, கொரிக்க சைடிஷ்களும் வைத்துவிட்டு சென்றான். பியரை எடுத்து ஒரு மடக்கு குடித்தவுடன் துப்பிவிட்டான், மிகவும் கஷ்டப்பட்டு பியரை குடித்து முடித்த சந்தோஷுக்கு போதை அதிகமாக ஏறியது. ( Tamil Novels Episode 3 உயிரில் கலந்தவளே பாகம் 3 )

தள்ளாடியபடியே தனது காருக்கு சென்ற சந்தோஷால் காரை ஸ்டார்ட் செய்ய முடியவில்லை, அதிகமான தடவை முயற்சி செய்தும் கார் ஸ்டார்ட் ஆகவில்லை, காரை விட்டு கீழே இறங்கிய சந்தோஷ் ஏழு கிலோமீட்டர் தொலைவிலுள்ள தனது வீட்டிற்கு நடந்தே செல்லலாம் என்று முடிவெடுத்தான் போதையில்.

தொலைவில் வந்த காரை கவனிக்காமல் சாலையைக் கடக்க முயற்சித்த சந்தோஷ் மீது கார் லேசாக மோதியது, காரை ஓட்டி வந்தவர் ஆரம்பத்திலேயே சந்தோஷை கவனித்து விட்டதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது, ஆனாலும் கார் லேசாக மோதியதால் சந்தோஷ் கீழே விழுந்தான், கீழே விழுந்ததால் அதிர்ச்சியடைந்த காரை ஓட்டி வந்தவள் காரை விட்டு கீழே இறங்கினாள், அவள் யார் என்றால்? சித்ரா.

கீழே விழுந்த சந்தோஷ் போதையில் உளறிக் கொண்டிருந்தான், கீழே விழுந்து சந்தோஷை பார்த்த சித்ராவிற்கும் அதிர்ச்சி! சந்தோஷ் குடிப்பான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை!

இந்தப்பதிவில் Tamil novels Episode 3 உயிரில் கலந்தவளே பாகம் 3ல் மீனாட்சி மற்றும் சித்ரா நிலத்தை வாங்கியதையும், நிலத்தை இழந்த சந்தோஷ் என்ன செய்தான் என்பதையும் பார்த்தோம்.

Tamil Novels Episode 1 உயிரில் கலந்தவளே பாகம் 1

Tamil Novels Episode 2 உயிரில் கலந்தவளே பாகம் 2

Tamil Novels Episode 4 உயிரில் கலந்தவளே பாகம்-4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *