Tamil Novels Episode 2 – உயிரில் கலந்தவளே பாகம் 2
இந்த பதிவில் நாம் Tamil Novels Episode 2 உயிரில் கலந்தவளே இரண்டாம் பாகத்தை பார்க்க போகிறோம்,
Tamil Novels Episode 2 உயிரில் கலந்தவளே பாகம் 2
” என்னடா வந்ததிலிருந்து முகமே சரி இல்லை, ஏதாவது பிரச்சினையா” என்று சந்தோஷிடம் அவள் தாய் கௌரி கேட்டுக்கொண்டிருந்தாள்,
அதெல்லாம் ஒன்றும் இல்லை அம்மா, நேற்று பஸ்ஸில் வரும் பொழுது அருகில் ஒரு பெண் உட்கார்ந்திருந்தாள், அவள் மீனாட்சி எஸ்டேட்டிற்கு வேலைக்கு வந்து இருக்கலாம், பாவம் நல்ல பெண் அந்த எஸ்டேட்டிற்கு வேலைக்குப் போய் என்ன எல்லாம் கஷ்டப்பட போய்விடுவாளோ என்று நினைத்தேன், அதுதான் மனது கொஞ்சம் சஞ்சலமாக இருக்கிறது.
“என்னடா இது அதிசயமா இருக்கு, எப்பொழுதும் எந்த ஒரு பெண்ணைப் பற்றியும் பேசாதவன் நீ, இப்பொழுது ஒரு பெண்ணிற்காக பரிதாபப்படுகிறாய்” என்று கௌரி கேட்க,
“அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா, மனதில் திடீரென தோன்றியது அவ்வளவுதான் வேற எதுவும் விசேஷ காரணம் இல்லை” என்று சொல்லிவிட்டு சந்தோஷ் சித்திரலேகா தேயிலைத் தோட்டத்திற்கு தனது அன்றாட பணிகளை கவனிக்க சென்றான்.
அடுத்த நாள் காலை எட்டு மணி அளவில் தாயின் வற்புறுத்தலின் காரணமாக அருகிலுள்ள முருகன் கோவிலுக்கு சந்தோஷ் சென்றான், அங்கு அவன் கண்ட காட்சியில் சொக்கிதான் போனான்,
சிவப்பு நிற பாவாடை தாவணியில் தேவதைபோல் ஜொலித்துக் கொண்டு முருகனை வழிபட்டுக் கொண்டிருந்தாள் சித்ரா, அவளைப் பார்த்துதான் சொக்கிப் போய் விட்டான் சந்தோஷ்.
தன்னுடைய வழிபாட்டை முடித்து விட்டு சந்தோஷை கவனிக்காமல் சென்ற சித்ராவை ” ஹலோ தேவி மேடம், கோவிலுக்கு வந்தால் முருகனை மட்டும்தான் தரிசனம் செய்வீர்களா, இந்த அடியேனையும் சிறிது நேரம் தரிசனம் செய்யலாம் அல்லவா” என்று சந்தோஷ் கேட்க, ( Tamil Novels Episode 2 உயிரில் கலந்தவளே )
அப்பொழுதுதான் அவனைப் பார்த்த சித்ரா ” ஹலோ சார், நீங்கள் எப்படி இங்கே!” என்று தன்னுடைய ஆச்சரியத்தை அவள் காட்ட,
” உங்களுக்கு எதற்காக இவ்வளவு ஆச்சரியம் தேவி, நீங்கள் மட்டும்தான் கோவிலுக்கு வர வேண்டுமா அல்லது நான் கோவிலுக்கு வர மாட்டேன் என்று சத்தியம் எதுவும் செய்தேனோ” என்று அவன் கேட்க
” அப்படி ஒன்றும் இல்லை, நான் உங்களை இவ்வளவு சீக்கிரத்தில் மீண்டும் சந்திப்பேன் என்று நினைத்து பார்க்கவில்லை அதான் கேட்டேன்” என்ற பதிலை அவன் அவளிடமிருந்து பெற்றான்.
சரி உங்கள் வேலை எப்படி போகிறது, புதிய வேலை கடினமாக இருக்கிறதா என்று அவன் அக்கறையுடன் கேட்க,
அவனுடைய அந்த அக்கறையான குரலில் உருகிதான் போனாள் சித்ரா, ” யார் என்று தெரியாத பெண்ணின் மேல் இவ்வளவு அக்கறைபடுகிறான், தான் யார் என்று தெரிந்தாலும் இந்த அக்கறை அப்படியே இருக்குமா அல்லது அவனுடைய கோபத்தை தான் சந்திக்க நேரிடுமா” என்ற சிந்தனை அவளின் மனதில் ஓட,
” என்ன தேவி, நான் உங்களிடம் உங்கள் புதிய வேலையை பற்றி கேட்டேன், பதிலேதும் கூறாமல் வேறு ஏதோ சிந்தனையில் இருக்கிறாய் என்ன விஷயம்?” என்ற அவனுடைய குரல் அவளுடைய சிந்தனையை கலைக்க,
சிந்தனை எல்லாம் ஒன்றுமில்லை, புதிய வேலை பிடித்திருக்கிறது, வேலையில் கஷ்டம் ஒன்றுமில்லை, என்று அவள் முடித்துக்கொள்ள, சரி நேரமாகிறது கிளம்பலாமா என்று அவளே மீண்டும் தொடர,
ம், போகலாம் என்று சந்தோஷும் பதில் உரைக்க, இரண்டு பேரும் அவர்கள் பணியை கவனிக்க கிளம்பி சென்றனர், இரண்டுபேரும் பிரிந்து சென்றாலும் அன்றைய நாள் முழுவதும் ஒருவரைப் பற்றி இன்னொருவர் நினைத்துக் கொண்டே இருந்தனர்.
கோவிலில் இருந்து கிளம்பிய சித்ரா நேராக சென்றது மீனாட்சி எஸ்டேட்டின் அலுவலகத்திற்குதான், கிருஷ்ணன் மேனேஜிங் டைரக்டர் என்று எழுதப்பட்டிருந்த அறைக்குள் சென்ற சித்ரா ” அப்பா, காலையில் கோவிலுக்கு சென்று விட்டு ஆபீஸ்க்கு வரும்படி சொல்லி இருந்தீர்களே, என்ன காரணம்.”
” நீயும் படிப்பை முடித்து விட்டாய், இனி நீ மீனாட்சி எஸ்டேட்டில் அசிஸ்டென்ட் டைரக்டராக பொறுப்பேற்கக் கூடிய காலம் வந்துவிட்டது, இனி நீ உன் பணியை தொடங்கலாம்” என்று கூறிய கிருஷ்ணன் சித்ராவை அவளுக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குள் அழைத்துச் சென்றார்.
அங்கே அவளுடைய இருக்கையில் அமர வைத்துவிட்டு, சித்ராவின் பி ஏ ரேவதியை அவளுக்கு அறிமுகப்படுத்தினார், ” இவர்தான் உன்னுடைய பி ஏ ரேவதி, கடந்த 20 ஆண்டுகளாக நமது நிறுவனத்தில் வேலை பார்க்கிறார், உன்னுடைய வேலையையும் சந்தேகங்களையும் இவரிடம் கேட்டு தெரிந்து கொள்” என்று கூறிவிட்டு கிருஷ்ணன் தன்னுடைய அறைக்கு சென்றார்.
ரேவதியை பார்க்கும்போதே அவருடைய மதிப்பு சித்ராவுக்கு புரிந்தது, ரேவதி தன்னுடைய வாழ்வில் 45 ஆண்டுகளை கடந்து இருப்பாள் என்பது நிச்சயம், பார்ப்பதற்கு அடக்கமானவளாக தெரிந்தாலும், அனுபவ அறிவு உள்ளவன் என்பதை அவருடைய முகமே காட்டிக் கொடுத்தது.
“என்னுடைய வேலையும், நிறுவனத்தின் தற்போதைய நிலையையும் சற்று சுருக்கமாக கூறுகிறீர்களா மேடம்” என்று சித்ரா ரேவதியிடம் கேட்டாள்.
மேடம், நீங்கள் எதற்காக என்னை மேடம் என்று அழைக்கிறீர்கள், நான் உங்களின் பி ஏ, நீங்கள் இந்த நிறுவனத்தின் அசிஸ்டண்ட் டைரக்டர் அதனால் நீங்கள் என்ன ரேவதி என்று கூப்பிடுவதுதான் சரியாக இருக்கும் என்று ரேவதி சொல்ல,
“நீங்கள் இந்த நிறுவனத்தில் நீண்டகாலமாக வேலை செய்கிறீர்கள், அதை தவிர நீங்கள் என்னை விட இரண்டு மடங்கு வயதில் பெரியவர், அதனால் உங்களை மேடம் என்று அழைப்பது தான் சரியாக இருக்கும்.
அதற்குமேல் ரேவதியும் ஒன்றும் சொல்லாமல் நிறுவனத்தின் தற்போதைய நிலையை பற்றி கூற ஆரம்பித்தாள், ” தற்போதைய நிலையில் நமது நிறுவனம் நன்றாக லாபத்தில் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது, இப்பொழுது நமக்கு இருக்கும் பிரச்சனை காந்திநகர் சைட் பற்றியதுதான். அங்கே நாம் புதிய தேயிலை தோட்டம் ஆரம்பிக்க பிரான் செய்திருந்தோம், அதற்காக அந்த சைட் உரிமையாளரிடம் 50 லட்ச ரூபாய்க்கு கிருஷ்ணன் சார் விலை பேசினார்கள், முதலில் அதற்கு ஒத்துக்கொண்ட சைட்டில் உரிமையாளர் இப்பொழுது அந்த சைட்டை நமக்கு விற்க சற்று யோசனை செய்கிறார.” ( Tamil Novels Episode 2 உயிரில் கலந்தவளே பாகம் 2 )
முதலில் ஒத்துக்கொண்ட அவர் இப்பொழுது மறுக்க என்ன காரணம்? என்று சித்ரா கேட்க.
இப்பொழுது நமது போட்டி நிறுவனமான சித்திரலேகா எஸ்டேட்டும் அந்த சைட்டை விலைக்கு கேட்கிறார்கள், அதனால்தான் அதன் உரிமையாளர் நமக்கு விற்க யோசிக்கிறார்.
ரேவதி சித்திரலேகா எஸ்டேட் என்று சொன்னவுடன் சித்ரா மனதில் தோன்றிய உருவம் சந்தோஷுடையதுதான், தன் தாய் சித்திரலேகா எஸ்டேட்டை பற்றி சிறிது காலத்திற்கு முன்பு சொன்னது சித்ராவின் மனதில் நினைவுகளாக ஓட ஆரம்பித்தது.
மீனாட்சி எஸ்டேட்டும், சித்திரலேகா எஸ்டேட்டும் முதலில் ஒரே எஸ்டேட்டாகதான் இருந்தது, அதை ஆரம்பித்தது கிருஷ்ணனின் தாத்தாவான ராஜேந்திரன்தான், ராஜேந்திரன், சித்ராதேவி தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள், மூத்தவளின் பெயர் ஜானகி, இளையவர் பெயர் மாணிக்கம், ஜானகிக்கு சித்ரா தேவியின் அண்ணன் மகனான மனோகரி திருமணம் முடித்து வைத்தனர், இருவருக்கும் அவ்வளவு எளிதில் குழந்தை பாக்கியம் கிடைத்து விடவில்லை.
இரண்டு ஆண்டுகள் கழித்து மாணிக்கத்திற்கு லேகா என்ற பெண்ணை திருமணம் செய்துவைத்தனர், திருமணம் முடிந்த பத்தாவது மாதத்திலேயே லேகா ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள், அவனுக்கு தனது தந்தையின் பெயரான ராஜேந்திரன் என்பதையே மாணிக்கம் வைத்தார்.
எவ்வளவுதான் கோவில் கோவிலாக சென்று வேண்டினாலும் ஜானகிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை, இறுதியாக தனக்கு பிள்ளை வரம் வேண்டி மதுரை மீனாட்சி அம்மன் பாதத்தை சரணடைய, மதுரை மீனாட்சியின் கருணையால் ஜானகி ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். மீனாட்சியின் கருணையால் கிடைத்த பிள்ளை என்பதால் அவளுக்கு மீனாட்சி என்று ஜானகி பெயரிட்டார்.
மாணிக்கம் லேகா தம்பதியினர் ஒரு குழந்தையோடு நிறுத்திக்கொள்ள, மேலும் ஐந்து ஆண்டுகள் கழித்து மனோகரன், ஜானகி தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது, கிருஷ்ணன் என்று பெயரிட்டனர். அக்காள் ஜானகியும், தம்பி மாணிக்கமும் ஒற்றுமையாக ஒரே வீட்டில் வசித்து வர ராஜேந்திரன், மீனாட்சி மற்றும் கிருஷ்ணன் ஒன்றுக்குள் ஒன்றாகவே வளர்ந்து வந்தனர். சிறுவயதிலேயே ராஜேந்திரனுக்கு மீனாட்சிதான் என்று பெரியவர்கள் தங்களுக்குள்ளே பேசி வைத்தனர்.
பருவ வயதை அடைந்ததும் ராஜேந்திரன் தனது மேற்படிப்பிற்காக மதுரைக்குச் சென்றார், அங்கு கூட படிக்கும் பெண்ணான கௌரியுடன் பழக்கம் ஏற்பட்டது, படிப்புடன், கௌரி மேலுள்ள காதலையும் வளர்த்தால் ராஜேந்திரன், கௌரிக்கும் ராஜேந்திரனை பிடித்துப்போக, இருவரின் காதலும் வேகமாக வளர ஆரம்பித்தது.
அதே நேரம் வீட்டில் பெரியவர்களின் பேச்சும், ராஜேந்திரனின் அழகும் மீனாட்சியை ராஜேந்திரன் மீது தீராத காதல் கொள்ள வைத்தது. படிப்பு முடிந்து வீட்டிற்கு திரும்பிய ராஜேந்திரனிடம் திருமணப் பேச்சை எடுத்தால் மாணிக்கம், தன் தந்தையிடம் நான் திருமணம் செய்துகொள்ள சம்மதம் தான் ஆனால் மீனாட்சி அல்ல, கல்லூரியில் நான் காதலிக்கும் பெண்ணான கௌரியை.
ராஜேந்திரனின் காதலைப் பற்றி கேள்விப்பட்ட குடும்பத்தில் உள்ள அனைவரும் மிகப்பெரிய அதிர்ச்சி அடைந்தனர் என்று சொல்லலாம். சில பல வாக்குவாதங்கள் பிறகு, ராஜேந்திரனின் காதல் வெற்றி பெற்றது, குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து மதுரையில் கௌரியின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டனர், நல்ல குடும்பம் என்பதால் கௌரியின் வீட்டினரும் திருமணத்திற்கு சம்மதம் சொல்லவே, அதே மாதத்தின் கடைசியில் ஒரு நல்ல முகூர்த்தத்தில் திருமணத்திற்கான நாளும் குறிக்கப்பட்டது. ( Tamil Novels Episode 2 உயிரில் கலந்தவளே பாகம் 2 )
திருமணத்திற்கான நாளும் நெருங்க, நெருங்க குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியாக திருமண வேலையை பார்க்க ஆரம்பித்தனர். திருமணத்திற்கு சரியாக ஒரு வாரத்திற்கு முன்பு மீனாட்சி தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு விட்டாள், மாத்திரைகளை சாப்பிட்ட சிறிது நேரத்தில் மயங்கி விழ குடும்பத்தினர் அனைவரும் பதறி மீனாட்சியை மருத்துவமனையில் சேர்த்தனர்.
மருத்துவர்களின் கடுமையான போராட்டத்திற்கு பின்பு மீனாட்சி உயிர் பிழைத்தாள். அவளின் தாயும் தந்தையும் அவளிடம் சென்று “எதற்காக இப்படி செய்தாய், நீ இல்லாமல் நாங்கள் எப்படி உயிர் வாழ்வோம், உன்னுடைய தற்கொலை முடிவுக்கு காரணத்தை சொல்” என்று கேட்க,
மீனாட்சி ” நான் ராஜேந்திர அத்தானை மிகவும் நேசிக்கிறேன், அவர் இல்லாமல் இந்த உலகில் வாழவே எனக்கு விருப்பமில்லை, அதனால் தான் நான் இந்த முடிவை எடுத்தேண்,” என்று மீனாட்சி சொல்ல, பெற்றவர்களும், மற்றவர்களும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்கள் ஆனால் மீனாட்சி எனக்கு அத்தான் வேண்டும் என்று பிடிவாதமாக இருக்க,
வேறுவழியின்றி ஜானகியும், மனோகரனும் ராஜேந்திரனிடம் சென்று இந்த திருமணத்தை நிறுத்திவிட்டு தனது மகளை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டனர்.
” என்னை கௌரி தீவிரமாக காதலிக்கிறாள், நானும் அவளை என் உயிரின் மேலாக நேசிக்கிறேன், அதனால் என் வாழ்வில் அவளை தவிர வேறு யாருக்கும் இடமில்லை” என்று ராஜேந்திரன் சொல்லிவிட,
அக்கா தம்பி உறவு பிரிந்தது, மாணிக்கம், ஜானகி இருவருக்குள்ளும் மனஸ்தாபம் ஏற்பட்டது, ஒன்றாக வாழ்ந்த இரண்டு குடும்பங்களும் பிரிந்தது, ஒரே சொத்தாக இருந்த எஸ்டேட் இரண்டாக பிரிந்தது, ஜானகியும் மனோகரனும் தங்களது பங்கு எஸ்டேட்டிற்கு தனது மகள் பெயரை வைத்தனர்.
மாணிக்கம் தங்களது பங்கு எஸ்டேட்டிற்கு தனது தாயின் பெயரான சித்ராவையும், தனது மனைவியின் பெயரான லேகாவின் பெயரையும் இணைத்து சித்திரலேகா என்று பெயர் வைத்தார். குறிப்பிட்ட நாளில் ராஜேந்திரனிற்கு கௌரியுடன் திருமணம் நடைபெற்றது. ஓராண்டு கழித்து கவுரி ஆண் மகனைப் பெற்றெடுத்தாள், தங்களது மகிழ்ச்சியான வாழ்விற்கு கிடைத்த பரிசாக எண்ணி அவனுக்கு சந்தோஷ் என்று பெயரிட்டனர்.
மீனாட்சி திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டதால் ஐந்து ஆண்டுகள் கழித்து கிருஷ்ணனுக்கு சுசிலா என்ற பெண்ணை மணமுடித்து வைத்தனர், ஓராண்டில் கிருஷ்ணனும் பெண் பிள்ளைக்கு தகப்பனாக, தன் மகளுக்கு தன் பாட்டியின் பெயரான சித்ராதேவி என்பதை சூட்டினார்.
மீனாட்சி திருமணம் செய்து கொள்ளாததால் தனது தம்பியின் மகளான சித்ராவை தனது மகளாக வளர்க்க ஆரம்பித்தார், அங்கு மீனாட்சி ராணியாகவும், சித்ரா இளவரசியாகவும் இத்தனை நாளும் இருந்து வந்தனர்.
ஒத்தையடி பாதையிலே என்ற அலைபேசியின் ரிங்டோன் சித்ராவை கடந்த காலத்திலிருந்து நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தது.
Tamil Novels Episode 2 பாகம் 2 பதிவில் சந்தோஷ் சித்ரா சந்திப்பையும், சந்தோஷின் குடும்பத்திற்கும், சித்ராவின் குடும்பத்திற்கும் உள்ள பிரச்சினையை பார்த்தோம், அடுத்த பதிவில் மீதிக் கதையை பார்க்கலாம்.