Tamil Novels Episode 1 – உயிரில் கலந்தவளே
Tamil Novels Episode 1 உயிரில் கலந்தவளே பதிவு ஒரு இனிய காதல் கதையை உங்களுக்கு பரிசாக கொடுக்க போகிறது.
Tamil Novels Episode 1 உயிரில் கலந்தவளே
காலை 7 மணி ஆகியும் சூரியன் தனது உறக்கத்தை கலைத்து தனது பணியை ஆரம்பிக்கலாமா வேண்டாமா என்று நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில்தான் சித்ராவின் கார் கொடைக்கானலில் “மீனாட்சி எஸ்டேட்ஸ் என்ற போர்டு மாட்டப்பட்டிருந்த மாளிகையின் வாசலில் வந்து சேர்ந்தது.”
சித்ரா காரை விட்டு இறங்குவதற்கு முன்பே அவளை வரவேற்பதற்கு ஓடோடி வந்தனர் அவளது அத்தை மீனாட்சியும் அவளது தாய் சுசீலாவும். அத்தை மற்றும் தாயின் நலம் விசாரிப்புகள் முடிந்தவுடன் மூவரும் சேர்ந்து வீட்டுக்குள் செல்ல, “வாங்கி வந்த பொருட்களை எல்லாம் எடுத்துக் கொண்டு உள்ளே வந்தார் டிரைவர்.”
தன் அன்பின் பரிசாக தான் வாங்கி வந்த பொருட்களை எல்லாம் தன்னைப் பெற்றவளுக்கும், தன்னை பெறாத தாயான அத்தைக்கும் கொடுத்துவிட்டு தன்னுடைய அறைக்கு சென்றாள், தன்னுடைய அறையில் குளித்துவிட்டு தன்னுடைய கல்லூரி தோழியிடம் போனில் பேசிக்கொண்டிருந்த சித்ராவின் காதில் தாயிடம் தந்தை பேசும் குரல் கேட்டது,
தன் அறையை விட்டு வெளியே வந்து ” அப்பா எப்படி இருக்கிறீர்கள், தொழில் நல்லபடியா போகிறதா!”
“அதெல்லாம் நன்றாக தான் இருக்கிறேன் தொழிலும் நன்றாக செல்கிறது” என்று கிருஷ்ணன் தன் மகளிடம் சொல்லிவிட்டு அவளிடம் நலம் விசாரித்தார்,
” நீ எப்படிமா இருக்கிறாய், பரீட்சைகள் எல்லாம் நன்றாக எழுதி இருக்கிறாயா? உன் மேற்படிப்பிற்கு இங்கே இல்லாத காலேஜா! அதையெல்லாம் விட்டுவிட்டு சென்னையில்தான் படிக்க வேண்டும் என்று அடம்பிடித்து சென்றுவிட்டாய், இரண்டு வருடமாய் உன்னை பிரிந்து நாங்கள் பட்ட கஷ்டம் எங்களுக்கு தான் தெரியும்” என்று தன் மகளிடம் தனது லேசான வருத்தத்தை காட்டினார்.
அதற்கு சித்ரா “அதான் வந்துவிட்டேனே அப்பா இனி உங்களையும் நம் குடும்பத்தையும் விட்டு எங்கேயும் செல்ல மாட்டேன்.”
” சரிமா வா சாப்பிடலாம் நேரமாகிறது பார்” என்று தந்தையும் மகளும் உணவருந்த செல்ல அங்கு ஏற்கனவே உணவு மேஜையில் உணவை தயாராக வைத்திருந்தான் தாய் சுசீலா, சில நிமிடங்களில் அத்தை மீனாட்சியும் இணைந்துகொள்ள கடந்தகால கதைகளை பேசிக்கொண்டே காலை சிற்றுண்டியை சாப்பிட்டு முடித்தனர்.
காலை உணவை உட்கொண்ட பின் தந்தையும் அத்தையும் எஸ்டேட்டிற்க்கு தொழிலை கவனிக்க செல்ல, தாயோ தனது வழக்கமான வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள, சென்னையில் கல்லூரி, படிப்பு என்றே வாழ்க்கை பரபரப்பாக சென்றுவிட்டது ஆனால் இப்பொழுது வீட்டில் ஒரு வேலையும் செய்யாமல் சும்மா இருக்க சித்ராவிற்கு முடியவில்லை.
சிறிது நேரம் டிவி பார்த்தாள் ஆனால் அதில் மனது ஒன்றவில்லை, சிறிது நேரம் தூங்கலாம் என்று தனது அறைக்கு சென்று படுக்கையில் படுத்தாள், ஆனால் தூக்கமும் அவளுக்கு ஒத்துழைக்காமல் போகவே மனது நேற்று இரவு பேருந்தில் நடந்த சம்பவங்களை அசை போட்டது.
சென்னையிலிருந்து கொடைக்கானல் செல்லும் ஏசி பேருந்தில் டிக்கெட் புக் செய்து வைத்திருந்த சித்ரா பேருந்து கிளம்புவதற்கு 10 நிமிடங்கள் முன்பே வந்து விட்டாள். ஆனால் பேருந்து கிளம்புவதற்கு உரிய நேரம் ஆனபோதிலும் ஓட்டுநர் பேருந்தை எடுக்கவில்லை, பேருந்து கிளம்புகிற நேரம் தாண்டியும் பேருந்து கிளம்பாததால் சித்ராவிற்கு மனதுக்குள் எரிச்சல் மூண்டது.
அவளை போலவே பேருந்தினுள் இருந்த சில பயணிகளுக்கும் எரிச்சல் ஏற்படவே அவர்கள் நேராக ஓட்டுநரிடம் சென்று பேருந்து தாமதமாவதற்கான காரணத்தை கேட்டனர், அதற்கு ஓட்டுநர் ” டிக்கெட் புக் செய்த பயணி ஒருவர் இன்னும் வரவில்லை, அவர் வருகிறாரா என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்று சொல்ல,
” பேருந்து கிளம்பும் நேரம் தாண்டி பத்து நிமிடங்கள் ஆகிவிட்டது, இதற்கு மேலும் காத்திராமல் கிளம்ப வேண்டியது தானே” என்று ஓட்டுநரிடம் பயணிகள் கோபப்பட்டு பேச ஓட்டுனர் பேருந்தை கிளப்பினார். அப்போது ஒரு பயணி பேருந்தை நிறுத்தி ஏறிக்கொண்டார்.
” பேருந்து கிளம்புகிற நேரத்திற்கு சரியாக வர மாட்டாயா” என்று ஓட்டுனர் அவனிடம் கோபப்பட அவன் எதுவும் பேசாமல் சித்திராவின் அருகில் உள்ள சீட் காலியாக இருக்க அதில் உட்கார்ந்தான், அவனுடைய முகத்தில் சிறிய கவலை இருந்ததை சித்ரா கவனித்தாள்.
அவளின் மனதிற்குள் “இவன் என்ன காரணத்திற்காக தாமதமாக வந்திருப்பான், எதற்காக சோகமாக இருக்கிறான் இவனுக்கு அப்படி என்னதான் பிரச்சினை இருக்கும்? என்ற கேள்வி எழுந்தது. மனதின் குறுகுறுப்பு தாங்க முடியாமல் அவனிடமே அந்த கேள்வியை கேட்க, அவனுடைய மௌனமே சித்ராவிற்கு பதிலாக வந்தது. ( Tamil Novels Episode 1 உயிரில் கலந்தவளே )
சித்ராவிற்கு சிறுவயதிலிருந்தே அவளுக்கு சந்தேகம் என்று ஒன்று வந்துவிட்டால் அதற்கு பதில் உடனடியாக தெரிந்தாக வேண்டும், “நமக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம், இவனுக்கு என்ன பிரச்சனை இருந்தால் நமக்கென்ன” என்று நினைத்து ஒதுங்குகிற பெண்ணில்லை சித்ரா.
பேருந்து கிளம்பி ஒருமணிநேரம் இருக்கும், சித்ராவிற்கு தூக்கம் வரவில்லை, அவளது கேள்விக்கு பதில் தெரியாமல் தூக்கம் வரப் போவதுமில்லை, அருகில் இருந்தவனோ அலைபேசியை நோண்டி கொண்டிருக்க,
” சார் நான் கேட்கிறேன் என்று கோபப்படாதீர்கள், உங்களுக்கு மனதில் ஏதோ பிரச்சினை இருக்கிறது அதனால் உங்கள் முகம் வாடிப்போய் இருக்கிறது” அதனால் எதற்காக நீங்கள் பேருந்து தாமதமாக வந்தீர்கள்? அதற்கு காரணம் உங்கள் பிரச்சினைதான் என்று நினைக்கிறேன், அதனால் நீங்கள் உங்கள் பிரச்சினையை என்னிடம் கூறினால் உங்களுக்கு ஆறுதலாக இருக்கும்.
என்று எல்லாம் தெரிந்தவள் போல் சித்ரா மீண்டும் தனது கேள்விகளை தொடுக்க, அவன் தனது மவுனத்தை கலைத்து பேச ஆரம்பித்தான், ” உனக்கு இப்பொழுது என்ன தெரியவேண்டும், நான் எதற்காக தாமதமாக வந்தேன் என்பது தானே” நான் அண்ணா சாலை பேருந்து நிறுத்தத்தில் தாம்பரம் பேருந்து நிலையம் வருவதற்கு பேருந்துக்காக காத்து கொண்டு இருந்தேன்.
அப்பொழுது வயதான பெரியவர் ஒருவர் சாலையை கடந்தார், வேகமாக வந்த கார் ஒன்று அவரை இடித்து விட்டு நிற்காமல் சென்று விட்டது, அடிப்பட்டு கீழே விழுந்த அவருக்கு உதவ யாரும் முன்வரவில்லை. நான் ஆம்புலன்சை அழைத்து அவரை ஆம்புலன்சில் ஏற்றி விட்டு பின்பு பேருந்து நிலையத்திற்கு வந்தேன் அதனால்தான் எனக்கு தாமதமாகிவிட்டது, அவருக்கு இப்பொழுது எப்படி இருக்கிறதோ என்பதை நினைத்து நான் சற்று கவலையாக இருக்கிறேன்.
சித்ராவிற்கு அவன்மேல் மரியாதை அதிகமானது, ” யார் என்று தெரியாத பெரியவர் ஒருவருக்காக இவ்வளவு கவலைப்படுகிறானே,” அதன் பிறகு இருவரும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டார்கள்,
தனது பெயர் சந்தோஷ், விவசாயத்தில் பட்டப்படிப்பு படித்துவிட்டு சொந்த ஊரான கொடைக்கானலில் விவசாயம் பார்க்கிறேன் என்று அவன் தன்னை பற்றி சொல்லிக் கொண்டு வர, ஐ எனக்கும் கொடைக்கானல்தான், கொடைக்கானலில் நீங்கள் யார், உங்கள் வீடு எங்கே இருக்கிறது? என்று ,சித்ரா கேட்க,
அதற்கு சந்தோஷ் ” சித்திரலேகா தேயிலை எஸ்டேட் உனக்கு தெரியுமா, அது எங்களுடைய தான்” அதைதான் நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன், சென்னை அண்ணாசாலையில் ஒரு விவசாய கருத்தரங்கு இன்று நடந்தது, அதில் கலந்து கொண்டு இப்பொழுது கொடைக்கானலுக்கு திரும்புகிறேன், என்று கூறினான்.
சந்தோஷ் கூறியதைக் கேட்ட சித்ராவின் முகத்திலோ பேரதிர்ச்சி, ஆனால் அதை அவன் கவனிப்பதற்கு முன்பு தன் முகத்தை மாற்றிக் கொண்டே ஒரு புன்முறுவலை சந்தோஷுக்கு பதிலாக அளித்தாள். ” சரி என்னைப் பற்றி நான் சொல்லிவிட்டேன், நீ உன்னை பற்றி ஒன்றும் சொல்லவில்லை” என்று சந்தோஷ் கேட்க,
சற்று நேரம் திருதிருவென முழித்த சித்ரா ” என் பெயர் தேவி, நான் பிஏ படித்திருக்கிறேன், குடும்பத்தில் உள்ள வறுமையின் காரணமாக கொடைக்கானலில் உள்ள மீனாட்சி எஸ்டேட்டிற்கு சூப்பர்வைசராக வேலை செய்யப்போகிறேன்” என்று சட்டென்று மனதில் தோன்றிய பொய்யை சித்ரா கூறினாள்,
அதைக்கேட்ட சந்தோஷின் முகம் சற்று வாடியது, மீனாட்சி எஸ்டேட்டிற்கா வேலைக்கு செல்கிறாய், அங்குள்ளவர்கள் ஆணவம் பிடித்தவர்கள், சற்று கவனமாக இருந்து கொள்.
சந்தோஷ் சொன்னதை கேட்ட சித்ராவின் முகம் வாடியது, “தன்னுடைய குடும்பத்தை பற்றி சந்தோஷ் தவறான அபிப்பிராயம் கொண்டிருக்கிறானே என்று”
” ஏய் நீ உன்னுடைய சொந்த ஊர் கொடைக்கானல் என்றுதானே சொன்னாய்” நீ இப்பொழுது அங்கு வேலைக்கு செல்கிறேன் என்று சொல்கிறாய், ஒழுங்காக உண்மையை சொல் என்று சந்தோஷ் கேட்க, நான் உங்களிடம் விளையாட்டிற்கு அப்படி சொன்னேன், “அப்பொழுது தானே நீங்கள் உங்களைப் பற்றி சொல்வீர்கள்” என்று சொல்லி சமாளித்தாள்.
பின்பு சந்தோஷ் சீட்டைப் பின்னால் சாய்ந்து கொண்டு தூங்க ஆரம்பித்தான், ஆனால் சித்ராவிற்கு சந்தோஷ் யார் என்பதை அறிந்ததால் தூக்கம் தொலைந்தது. ஒருவழியாக நித்திரை சித்ராவையும் அணைத்தது. அதன் பிறகு சித்ரா விழித்தது கொடைக்கானல் பேருந்து நிலையத்தில்தான்.
” தேவி எந்திரி, கொடைக்கானல் வந்துவிட்டது” என்ற சந்தோஷின் குரல்தான் சித்ராவை எழுப்பியது, சந்தோஷின் குரலால் எழுந்துகொண்ட சித்ரா தனது பைகளை எடுத்துக்கொண்டு பேருந்திலிருந்து இறங்கினாள். சந்தோஷ் சித்ராவிடம் நான் எனது பைக்கை டூவீலர் ஸ்டாண்டில் விட்டிருக்கிறேன் ” நான் உன்னை கொண்டுபோய் விடட்டுமா” என்று கேட்டான்.
அதற்கு சித்ரா ” என் தோழி ஒருத்தி கொடைக்கானலில் இருக்கிறாள், அவள் வந்து என்னை அவள் வீட்டிற்கு அழைத்துச் செல்வாள். அவள் வீட்டிற்கு சென்று குளித்துவிட்டு பின்புதான் மீனாட்சி எஸ்டேட்டிற்க்கு செல்ல வேண்டும்” என்று கூறவே, சரி பத்திரமாக பார்த்து செல், எதுவும் அவசரம் என்றால் என்னை கூப்பிடு என்று தனது அலைபேசி எண்ணை அவளிடம் கொடுத்துவிட்டு சென்றான்.
சந்தோஷ் சென்றவுடன் டிரைவருக்கு போன் செய்து தான் இருக்கும் இடத்தை கூறவே அவர் வந்து சித்ராவை காரில் அழைத்துச் சென்றார், காலை 7 மணி அளவில் மீனாட்சி எஸ்டேட் மாளிகையை வந்தடைந்தாள். இதைதான் Tamil Novels Episode 1 உயிரில் கலந்தவளே கதையின் தொடக்கத்தில் நீங்கள் படித்தது. இதையெல்லாம் நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்த சித்ரா இந்த நினைவுகளுடனே தூங்கிவிட்டாள்.
Tamil Novels Episode 1 நிறைவு பெற்றது, Episode 2வில் சித்ரா சந்தோஷத்துடன் இணைந்து நாமும் பயணிப்போம்.